Kallakkadal Warning: தென்மாவட்டங்களில் கடலோரம் மீண்டும் கள்ளக்கடல் எச்சரிக்கை; மறந்தும் கடற்கரைக்கு போயிடாதீங்க.!
கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள காரணத்தால், கடலோரம் இருப்பவர்களும் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஜூன் 10, புதுடெல்லி (New Delhi): கடலில் எந்த விதமான லேசான அறிகுறியும் இன்றி, திடீரென பலத்த காற்று வீசி, கடல் கொந்தளித்து 3 மீட்டர் வரை அலை உயர எழும் நிகழ்வு கள்ளக்கடல் என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு அரபிக்கடல் மற்றும் அரபிக்கடல் - இந்திய பெருங்கடல் - வங்காள விரிகுடா சந்திக்கும் இடங்களில் அவ்வப்போது ஏற்படுவது உண்டு. ஆனால், பெரிய அளவிலான உயிர் சேதங்கள் கடந்த சில மாதம் வரை இதனால் பெரிய அளவில் ஏற்பட்டது இல்லை. பொருட்சேதங்கள் என்பது கடலோரம் வசிக்கும் மக்களுக்கு பழகிப்போன ஒன்று ஆகும். Chinese Man attempt to Suicide: ஆணுறுப்பை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த சீனர்; பீகார் சிறையில் அதிர்ச்சி சம்பவம்.!
கள்ளக்கடல் எச்சரிக்கை: இந்நிலையில், ஜூன் 10ம் தேதியான இன்று முதல் நாளை (ஜூன் 11) இரவு 11:30 மணி வரையில் கள்ளக்கடல் எச்சரிக்கை தேசிய கடல்சார் மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கடல்சார் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை குறிப்பில், "இன்று முதல் நாளை இரவு 11:30 வரை தென்மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதிகளில் கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள கடல் கரையோரம் மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் கள்ளக்கடல் காரணமாக அலைகள் திடீரென 3 மீட்டர் உயரம் வரை எழக்கூடும். இதனால் கடலோரம் இருப்பவர்கள் கடலுக்குள் செல்லப்படும் வாய்ப்புகள் அதிகம். கவனமாக இருக்க வேண்டும். கடலோரம் வசிக்கும் மக்களுக்கும் கவனமாக இருக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. Driving License Restrictions: 40 வயதை கடந்தவர்கள் ஓட்டுனர் உரிமம் வாங்க கட்டுப்பாடுகள் அமல் - மாநில போக்குவரத்துத்துறை அறிவிப்பு..! விபரம் உள்ளே.!
கள்ளக்கடல் ஆபத்தானது: மே மாதம் பலியான 8 உயிர்கள்: கடந்த மே மாதம் மொத்தமாக குமரி மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதியில் நிகழ்ந்த கள்ளக்கடல் சீற்றத்தில் சிக்கி பயிற்சி மருத்துவர்கள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கள்ளக்கடல் எச்சரிக்கையை தொடர்ந்து, கடலோர பகுதிகளில் காவல் துறையினர் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கள்ளக்கடல் என்பது எங்கோ ஒரு நாட்டில் ஏற்பட்டு வரும் அதிக பலம் புயல் காற்றின் சீற்றத்தால் ஏற்படும் நிகழ்வு ஆகும். இதனால் கடல் அலைகள் திடீரென மீட்டர் அளவிலான உயரம் எழுந்துகொள்ளும். சுதாரிக்கும் நொடிக்குள் தனது பிடியில் சிக்கியோரை கடற்கரையில் இருந்து கடலுக்குள் இழுத்துச்சென்று தன்னுடன் சரணாகதி செய்துவிடும்.