ஜூன் 10, பாட்னா (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள முஸாபர்பூர், அமர் ஷாஹித் குதிராம் போஸ் மத்திய சிறைச்சாலையில், சீனாவில் உள்ள ஷாண்டாங் மாகாணத்தை சேர்ந்த லி ஜியாகி என்ற 61 வயது நபர், முறையான ஆவணங்கள் இன்றி இந்தியாவில் நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் கடந்த ஜூன் 6ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் அவரிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் தேவையான ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். மேலும், சீன தூதரக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Driving License Restrictions: 40 வயதை கடந்தவர்கள் ஓட்டுனர் உரிமம் வாங்க கட்டுப்பாடுகள் அமல் - மாநில போக்குவரத்துத்துறை அறிவிப்பு..! விபரம் உள்ளே.!
பார்வை கண்ணாடியை உடைத்து அதிர்ச்சி செயல்:
இதனிடையே, கடந்த ஜூன் 07ம் தேதி வெள்ளிக்கிழமை, கழிவறைக்கு சென்ற லி ஜியாகி, திடீரென தனது ஆணுறுப்பை (Man attempt to Suicide by Cutting Private Part) அறுத்து தற்கொலை செய்ய முயற்சித்து இருக்கிறார். உயிருக்கு போராடியவாறு மயக்க நிலையில் கண்டறியப்பட்டவரை மீட்ட சிறைத்துறை அதிகாரிகள், சிகிச்சைக்காக ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி செய்தனர். முதற்கட்ட விசாரணையில், லி தனது ஆணுறுப்பை பார்வைக்காக பயன்படுத்தப்படும் கண்ணாடியை உடைத்து அறுத்து தற்கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்தது.
லி-யிடம் கைது செய்யப்படும்போது சீன வரைபடம், செல்போன், 3 சிலைகள், சீனா, நேபாளம் மற்றும் இந்திய மதிப்பிலான பானங்கள் ஆகியவை இருந்தது.