![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/1718005671TN%2520Driving%2520License%2520Regulation%2520%2528Photo%2520Credit%2520%2540Sriramrpckanna1%2520X%2529-380x214.jpg)
ஜூன் 10, சென்னை (Chennai): தமிழ்நாடு மாநில போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர், மோட்டார் வாகன விதிகளின்கீழ், 40 வயதை கடந்துள்ளவர்கள் புதிதாக ஓட்டுநர் உரிமம் பெற, (TN Driving License Update) புதுப்பிக்க சில நடைமுறைகளை அறிவித்து இருக்கிறார். அதன்படி, இனி 40 வயதை கடந்துள்ள நபர்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு, மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த மருத்துவர்களின் சான்றிதழ் என்பது அவசியமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விரிவான செய்திக்குறிப்பில் அவை தெளிவுபட அறிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகள் அமல்:
அந்த செய்திக்குறிப்பில், "மத்திய மோட்டார் வாகன விதி எண்2-ன் படி 40 வயதிற்கும் மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருந்துவச் சான்று பெற்ற பின்னரே புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கோ அல்லது பழைய ஓட்டுநர் உரிமத்தினைப் புதுப்பிக்கவோ இயலும். மாநிலத்தின் ஒரு சில இடங்களில் தகுதி வாய்ந்த மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெறாமல், போலி மருத்துவர்களிடம் சான்றிதழ்கள் தயாரித்து சாரதி' மென்பொருளில் பதிவேற்றம் செய்துள்ள நிகழ்வுகள் நடைபெற்று வந்துள்ளன. இது குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. Vikravandi Bye-Election Date: விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு; தேர்தல் ஆணையம் அதிரடி.!
மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்:
இதனைத் தடுக்கும் விதமாக சாரதி மென்பொருளில் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் தங்களது தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் பதிவுச் சான்று எண்ணை பதிவேற்றம் செய்து, சாரதி மென்பொருளில்: கேட்கப்படும் தங்களது கிளினிக் மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து விவரங்களை ஒரு முறை பதிவேற்றம் செய்து கொண்டு. தங்களது பெயரினை ஒரு முறை பதிவு செய்துகொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து, தங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணுக்கு வரும் கடவுச் சொல்லை உள்ளீடு செய்ய வேண்டும். இதனை முடித்த பின்பு இவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்கள் சாரதி மென்பொருளைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்களின் மருத்துவச் சான்றினை பதிவேற்றம் செய்வதற்கு அனுமதிக்கப்படும்.
முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை:
மருத்துவர்கள் தங்களது விவரங்களை முதலில் உள்ளீடு செய்து தங்களுக்கான சாரதி மென்பொருளில் நுழைவினை ஒரு முறை உறுதி செய்துகொண்டால் போதுமானது. அவ்வாறு முறையாக சாரதி மென்பொருளில் பதிவு செய்து கொண்ட பின்னர் தொடர்ந்து விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவச் சான்றினை மருத்துவர்கள் எலக்ட்ரானிக் முறையிலேயே சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். எனவே தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே சாரதி மென்பொருளை இனி பயன்படுத்தி விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவச் சான்றிதழினை மின்ணணு வாமிலாக மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும். அதன் மூலம் போலி மருத்துவர்கள் மூலம் வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதழை முறைகேடாக பயன்படுத்தி வந்தது தடுக்கப்பட்டுள்ளது. Virudhunagar Accident: சாலையோர டீக்கடையில் ஜீப் புகுந்து 3 பேர் பலி., அரசுப்பேருந்தின் தறிகெட்டு 34 பேர் காயம்.. விருதுநகரில் நடந்த அடுத்தடுத்த துயரங்கள்.!
செயல்முறை விளக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு:
இந்த சாரதி மென்பொருளில் மருத்துவர்கள் தங்களது விவரங்களை உள்ளீடு செய்வது குறித்தும், தங்களது பதிவுகளை உறுதி செய்வது குறித்தும் நாளை (7.10.2024) காலை 10 மணியளவில் மாநிலம் முழுவதிலுமுள்ள அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மூலம் ஒரு செயல்முறை விளக்கம் காண்பிக்கப்படும், அதில் கலந்துகொண்டு தங்களது பதிவுகளை இறுதி செய்யும் முறைகள் குறித்து மருத்துவர்கள் அறிந்துகொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 வயதை கடந்தவர்கள் ஓட்டுனர் உரிமம் வாங்க கட்டுப்பாடுகள் அமல் - மாநில போக்குவரத்துத்துறை அறிவிப்பு.. #Tamilnadu | #DrivingLicence | #TNGovt pic.twitter.com/w49hkJHlhB
— Sriramrpckanna (@Sriramrpckanna1) June 10, 2024