National Thermal Engineering Day 2024: தேசிய வெப்ப பொறியாளர்கள் தினம்.. அதன் வரலாறு என்ன தெரியுமா?!
வெப்ப ஆற்றலின் முக்கியத்துவத்தையும், வெப்ப மேலாண்மையில் பணிபுரியும் மக்களின் பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24 அன்று தேசிய வெப்பப் பொறியாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஜூலை 24, சென்னை (Chennai): சமூகத்திற்கு தெர்மல் பொறியாளர்களின் பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24 தேசிய தெர்மல் பொறியாளர்கள் தினமாக (National Thermal Engineering Day) கொண்டாடப்படுகிறது.
வரலாறு: Advanced Thermal Solutions Inc என்ற நிறுவனம் 2014 ஆம் ஆண்டு இந்த நாளினை கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. தொடர்ந்து வெப்ப பொறியாளரின் கடின உழைப்பைக் குறிக்க ATS ஆல் இந்த நாள் தொடங்கப்பட்டது. வெப்ப ஆற்றலின் முக்கியத்துவத்தையும், வெப்ப மேலாண்மையில் பணிபுரியும் மக்களின் பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24 அன்று தேசிய வெப்பப் பொறியாளர் தினம் கொண்டாடப்படுகிறது. Demonte Colony 2: ஆகஸ்ட் 15ல் திரையை மிரட்ட வருகிறது டிமாண்டி காலனி 2 திரைப்படம்; திகில் பிரியர்களுக்கு கொண்டாட்ட செய்தி.!
வெப்ப ஆற்றல்: ஒரு கோப்பையில் உள்ள சூடான பாலினை சிறிது நேரம் மேசையின் மீது வைத்தால், அந்த பாலின் வெப்பம் சிறிது நேரத்திற்குப் பிறகு குறையும். இதே போல் ஒரு பாட்டிலில் உள்ள குளிர்ச்சியான நீரினை சிறிது நேரம் மேசையின் மீது வைக்கும்போது அதனுடைய வெப்பநிலை சிறிது அதிகரிக்கும். இதில் சூடான பாலிலிருந்து ஆற்றலானது சுற்றுப்புறத்திற்குப் பரவுகிறது. அடுத்ததில் ஆற்றல் சுற்றுப்புறத்திலிருந்து நீர் உள்ள பாட்டிலுக்கு பரவுகிறது. இந்த ஆற்றலையே வெப்ப ஆற்றல் எனலாம். நமது அன்றாட வாழ்வில் வெப்ப ஆற்றலின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. பல்வேறு ஹைடெக் இயந்திரங்கள் மற்றும் சாதனங்கள் திறமையாக செயல்படுவதற்கு வெப்ப ஆற்றல் காரணமாகும். ஒரு நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வெப்ப ஆற்றல் உதவுவதால், இந்த நாள் முக்கியப் பங்கு வகிக்கிறது.