Aandal Temple Chariot Festival: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று; உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.!
திருமண வரம் கைகூடும் வாய்ப்பைத்தரும் ரங்கநாதரின் மனைவி ஆண்டாள் பிறந்த தினம் இன்று ஆண்டாள் ஜெயந்தியாக சிறப்பிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 07, ஸ்ரீவில்லிபுத்தூர் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் (Srivilliputhur) ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் (Arulmigu Nachiyar Aandal Temple) கோவில், புராதனங்களின்படி ஸ்ரீ ஆண்டாள் பிறந்து வளர்ந்த திருத்தலமாக கவனிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு ஆடி மாதம் பூரம் தினத்தில் ஆண்டாள் ஜெயந்தி சிறப்பிக்கப்படும் நிலையில், 2024 ம் ஆண்டுக்கான ஆடிப்பூரம், ஆண்டாள் ஜெயந்தி 7 ஆகஸ்ட் 2024 இன்று சிறப்பிக்கப்படுகிறது. Pasi Paruppu Payasam Recipe: சுவையான பாசிப்பருப்பு பாயாசம் செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
இன்று தேரோட்டம்:
கடந்த 10 நாட்களுக்கு முன்பே கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆண்டாள் கோவில் தேர்திருவிழாவின் முக்கிய அம்சமாக, இன்று தேர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் வீதிஉலா வரும். பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து ஆண்டாளை ஊரைச்சுற்றி பவனி வர உதவி செய்வார்கள். தேர்திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால், ஒருநாள் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. Andal Jayanthi: ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்; கேட்ட வரம் தரும் ஆண்டாள் அருள் பெறுக, வாழ்வில் மகிழ்ச்சி பெறுக.!
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு:
இந்நாளில் பக்தர்கள் அனைவரும் ஆண்டாள் - ரங்கநாதரின் அருள் பெறுவதற்கு எதுவாக மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடு செய்ய வரும் 17 ஆகஸ்ட் 2024 அன்று பணி நாளாக செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதுரை, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய நகரங்களில் இருந்து இன்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இன்று நடைபெறும் தேரோட்டம் மற்றும் பூஜையில் கலந்துகொண்டால், திருமணம் ஆகாத நபர்களுக்கு திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)