ஆகஸ்ட் 06, சென்னை (Kitchen Tips): பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு இனிப்பாக ஏதாவது செய்து கொடுக்க நினைத்தால், சத்தான பாசிப்பருப்பு (Moong Dal) பயன்படுத்தி பாயாசம் செய்து கொடுக்கலாம். இது மிகவும் சுவையாக இருக்கும். அப்படிப்பட்ட சுவையான பாசிப்பருப்பு பாயாசம் (Pasi Paruppu Payasam) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பாசி பருப்பு - 1 கப்
பச்சரிசி மாவு - 2 கரண்டி
வெல்லம் - 1 கப் (துருவியது)
தேங்காய் துருவல் - 3 கரண்டி
நெய் - கால் கப்
முந்திரி - 10
ஏலக்காய் - 3 (நசுக்கியது)
உலந்த திராட்சை - 10. Sorakkai Kootu Recipe: சுவையான சுரைக்காய் கூட்டு செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
செய்முறை:
முதலில் பாசிப்பருப்பை வெறும் பாத்திரத்தில் போட்டு பொன்னிறமாக வறுத்து, பின் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். பின்னர் வெந்த பருப்பை நன்கு மசித்துக் கொள்ளவும்.
நன்றாக வெந்தபின் பச்சரிசி மாவு தண்ணீர் விட்டு கலந்து, பருப்பு கலவையில் ஊற்றி கட்டியில்லாமல் நன்கு கலக்க வேண்டும். அடுத்து வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி கரையவைக்கவும்.
வெல்லம் கரைந்ததும் எடுத்து வேகவைத்த பருப்பில் வடிகட்டி ஊற்ற வேண்டும். பருப்புடன் ஏலக்காய், வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறிவிட்டு அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கிளறிவிடவும்.
மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி, முந்திரி, திராட்சையை வறுத்து பருப்பு கலவையில் கலக்கவும். பின் தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடம் கிளறிவிட்டு இறக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான பாசிப்பருப்பு பாயாசம் ரெடி.