World Cotton Day 2024: உலக பருத்தி தினம்.. பருத்தி ஆடைகளை பராமரிப்பதற்காக உங்களுக்கான சில டிப்ஸ் இதோ..!
உலக பருத்தி தினமானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 7 அன்று கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் 07, சென்னை (Special Day): உலக பருத்தி தினமானது (World Cotton Day) உலகெங்கிலும் அக்டோபர் 7ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளானது பருத்தியின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துக்காட்டுவதற்காகவும் பருத்தியினை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்காகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பருத்தி விளைச்சலில் இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களில் உள்ளன. உலக அளவில் ஜவுளித் தேவையில் பருத்தி ஆனது 27 சதவீதத்தினை நிரப்புகிறது. பருத்தி துணியானது உலக அளவில் 80 நாடுகளில் 10 கோடி குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இதன் காரணமாகவே பருத்தி உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தி ஐநா சபையானவது உலக பருத்தி தினத்தினை அனுசரித்தது. மேலும் ஆப்பிரிக்காவின் பெனின், பர்கினோபாஷோ, சாட், மாலி நாடுகளின் வேண்டுகோளை ஏற்று உலக வர்த்தக அமைப்பு 2019 அக்டோபர் 7ல் இத்தினத்தை அறிவித்தது.
பருத்தியின் நன்மைகள்: வெயில் காலங்களில் பருத்தி ஆடையினை அணிவதினால் உடல் குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது. சூரியனிலிருந்து வரும் சில கதிர்களை பருத்தியினால் தடுக்க இயலும். அதே நேரம் வெயில் காலத்தில் நம் உடலில் இருந்து வெளியேறும் வியர்வைகளை பருத்தி நன்கு உறிஞ்சி நம்மை குளிர்ச்சியாக வைத்திருக்கும். குறிப்பாக உள்ளாடைகளை பருத்தி துணியினால் அணிந்தால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். பருத்தி துணியானது துவைத்து முடித்த பிறகு மிகவும் கெட்டியாகவே மாறும் தன்மை உடையது. எனவே வாஷிங் மெஷின் துணையில்லாமல் இதனை கையாலே சுலபமாக துவைக்கலாம். மேலும் இவை இயற்கையாகவே கிடைக்கப் பெறுவதினால், 100% இயற்கையாகவே சிதையும் தன்மையையும் கொண்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இன்றி மக்கி விடுகிறது. அதுமட்டுமில்லாமல் பருத்தி துணியினால் ஆன போர்வை, படுக்கை, விரிப்பு போன்றவைகள் நல்ல தூக்கத்தினை தரும். Mutton Sukka Fry: சண்டே ஸ்பெஷல்; மட்டன் சுக்கா ப்ரை செய்வது எப்படி? .. ஆடு இறைச்சி நன்மைகள்.. இல்லத்தரசிகளுக்கான அசத்தல் டிப்ஸ் உள்ளே.!
பருத்தி ஆடைகள் பராமரிப்பு:
- பருத்தி ஆடைகளை அணிந்த பின்பு சிறிது நேரம் வெயிலில் காய போடலாம். பின்னர் ஆடையில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பின்படி துவைக்கலாம்.
- 100% பருத்தியால் ஆன ஆடையினை குளிர்ந்த நீரில் ஊற வைத்து மெல்லிய ரக டிடர்ஜென்ட் கொண்டு துவைக்கலாம் அல்லது ஷாம்புவினை கொண்டு துவைக்கலாம்.
- வெள்ளை நிற பருத்தி ஆடைகளை எப்போதும் தனியாக துவைக்க வேண்டும். இல்லையெனில் மற்ற ஆடைகளின் சாயத்தினை ஈர்த்து விடும்.
- பொதுவாக பருத்தி ஆடைகளை துவைக்கும் போது ஃபேப்ரிக் சாஃப்ட்னர் பயன்படுத்துவதை தவிர்க்கவும். அது பருத்தி ஆடைகளின் நிறத்தினை மாற்றிவிடும்.
- உச்சி வெயிலில் பருத்தி ஆடையினை துவைத்து காயப் போடக்கூடாது. அது துணியினை சுருங்க செய்துவிடும். எனவே நிழலில் துணியினை உட்புறமாக வைத்து காயப் போட வேண்டும்.
- பருத்தி ஆடைகளினை இஸ்திரி செய்யும் பொழுது சரியான வெப்பநிலையில் இஸ்திரி செய்ய வேண்டியது அவசியம். இல்லையெனில் அது துணியின் ஆயுட்காலத்தினை பாதிக்கும்.