Mutton Sukka (Photo Credit: Facebook)

அக்டோபர் 05, சென்னை (Cooking Tips): அசைவ பிரியர்களின் மிகுந்த விருப்பத்திற்குரிய உணவாக இருப்பது ஆடு. ஆட்டு இறைச்சி நமது உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகளையும், குளிர்ச்சியையும், உடல் ஆரோக்கியத்தையும் வாரி வழங்கும் தன்மை கொண்டது ஆகும். ஆட்டின் மூளை தாது விருத்திக்கு, கண்களின் குளிர்ச்சிக்கு, நினைவாற்றல் அதிகரிக்க, வலிமையான மூளை அமைப்பை பெற உதவும். ஆட்டு மூளை கபத்தை உடலில் இருந்து வெளியேற்றும், மார்பக புண்களை குணப்படுத்தும், மார்பகத்தை வலுப்படுத்தும் தன்மை கொண்டது ஆகும். ஆட்டின் இதயத்தை சமைத்து சாப்பிட்டு வந்தால் மனிதனின் இதயம் பலமாகும், மனஆற்றல் அதிகரிக்கும். Mint Rice Recipe: அருமையான சுவையில் புதினா சாதம் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

எலும்புகளை பலப்படுத்தும்:

ஆட்டு நுரையீரல், கொழுப்புகள் மனித உடலில் இருக்கும் வெப்பத்தை குறைக்கும், நுரையீரலுக்கு நன்மை வழங்கும். ஆட்டு இறைச்சி சிறுநீரக சுரப்பியை வெளிப்டுத்தும், ஆண்குறி வலிமையை மேம்படுத்தும், உடல் சூடை குறைக்கும், சருமம் பளபளப்பாக்க தீர்வு கொடுக்கும், எலும்புகள் வலுப்பெறும், பார்வை கோளாறு சரியாகி பார்வை தெளிவுபெறும். ஆட்டுக்கால் சூப் நமது எலும்புகளின் பலத்தை அதிகரிக்கும். இவ்வாறு பல்வேறு நன்மைகளை கொண்ட ஆடு இறைச்சியை வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இன்று ஆடு இறைச்சியில் (Mutton Sukka Recipe) சுவையான சுக்கா செய்வது என தெரிந்துகொள்ளுங்கள்.

செய்யத் தேவையான பொருட்கள்:

மட்டன் - 1 கிலோ,

இஞ்சி பூண்டு விழுது - 2 கரண்டி,

மட்டன் மசாலா - 1 பாக்கெட்,

மஞ்சள் தூள் - 3 கரண்டி,

பூண்டு - 10 பற்கள்,

மல்லித்தூள் - 2 கரண்டி,

நாட்டு வெங்காயம் - 150 கிராம்,

தக்காளி - 2 அல்லது 3,

தேங்காய் துருவியது - அரை கப்,

கசகசா, சோம்பு, பட்டை, பிரியாணி இலை, சோம்பு, கிராம்பு அடங்கிய பாக்கெட் - 1,

கறிவேப்பில்லை - சிறிதளவு,

கொத்தமல்லித் தழை - சிறிதளவு,

செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட மட்டன் துண்டுகளை சிறிய துண்டாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதில் சிறிதளவு மஞ்சள், மட்டன் மசாலா, தயிர், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி ஊறவைத்துக்கொள்ளவும். சுமார் 15 நிமிடம் முதல் 25 நிமிடம் வரை அதனை ஊறவைக்கவும். Mullangi Keerai Masala Recipe: முள்ளங்கி கீரை மசாலா சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..! 

குக்கரில் கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பின் மட்டனை சேர்த்து 2 முதல் 4 நிமிடங்கள் வரை வதக்க வேண்டும். இவை வதங்கியதும் மல்லித்தூள், மசாலாத் தூள், உப்பு, நீர் ஆகியவற்றை சேர்த்து கலந்துவிட வேண்டும்.

லேசான கொதி வந்ததும் குக்கர் மூடியை சேர்த்து 4 முதல் 6 விசில் வரை வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இளம் ஆட்டுக்கறியாக இருந்தால் 4 விசில் போதுமானது, வயதான ஆடாக இருந்தால் 7 முதல் 9 விசில் வரை எடுக்கும்.

பின் தேங்காய், கசகசா, சோம்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வானலியில் எண்ணெய் ஊற்றி கசகசா, சோம்பு, கிராம்பு, பிரியாணி இலை ஆகிய பொருட்கள் சேர்த்து பொன்னிறமானதும், இஞ்சி - பூண்டு விஸுது, வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், மட்டன் மசால் ஆகியவரை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இவை வதங்கியதும் தேங்காய் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து கிளற வேண்டும்.

பின் மட்டன் துண்டுகளை தனியாக எடுத்து வானெலியில் சேர்த்து கிளற வேண்டும். மட்டன் வேகவைத்த நீரை தேவை என்றால் சிறிதளவு ஊற்றி கிளறிக்கொள்ள வேண்டும். சுவையான மட்டன் சுக்கா தயார்.

பின்குறிப்பு: ஆட்டு இறைச்சியை இரவு வேளை, மதுபானம் அருந்திவிட்டு பின் சாப்பிடாமல் இருத்தல் உங்களின் உயிருக்கு நல்லது.