World Pharmacists Day 2024: உலக மருந்தாளுநர் தினம்.. வரலாறு என்ன தெரியுமா?!

2009-ல் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 25-ம் தேதி உலக மருந்தாளுநர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

World Pharmacists Day (Photo Credit: LatestLY)

செப்டம்பர் 25, புதுடெல்லி (Special Day): உலகளாவிய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மருந்தாளுனர் (Pharmacists- ஃபார்மசிஸ்ட்ஸ்) பங்களிப்பிற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் 25 (இன்று) உலக மருந்தாளுநர் தினம் (World Pharmacists Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மருந்தாளுநர்கள் மருத்துவ உலகை அனைவருக்கும் சிறந்த இடமாக மாற்ற அவர்கள் தங்கள் அனுபவம், அறிவு மற்றும் திறமையைப் பயன்படுத்துகிறார்கள். மருந்துகளை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்பதை மக்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். Fertility Management: நெல்பயிரில் இலை வண்ண அட்டை மூலம் தழைச்சத்து மேலாண்மை.. விபரம் உள்ளே..!

வரலாறு: 2009ஆம் ஆண்டு துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் நடந்த கூட்டத்தின் போது மருந்தாளுநர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் பணிகளை வெளிப்படுத்தவும் இந்த செப்டம்பர் 25ஆம் தேதி உலக மருந்தாளுநர் தினத்தை கொண்டாடுவது என FIP கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த நாள் கொண்டாடப்படுவதற்கான முக்கிய காரணம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மருந்தாளுநர்களின் பங்கு மற்றும் செயல்களை ஊக்குவிப்பதே என்றும் அறிவித்தது FIP.