Use of Leaf Color Chart (Photo Credit: @backiya28 X)

செப்டம்பர் 24, புதுடெல்லி (Agriculture Tips): இலை வண்ண அட்டை (Leaf colour chart-LCC) பயிரின் தேவையறிந்து உரமிட பயன்படுத்தப்படுகிறது. இதில் 1 முதல் 5 பசுமை நிற பட்டைகள் உள்ளன. நெல்லில் தழைச்சத்து மேலாண்மை இலை வண்ண அட்டையின் மூலம் முடிவு செய்யப்பட்டு அளவிடப்பட்ட எண்ணை வைத்து முடிவுசெய்யப்படுகிறது. Sugarcane Diseases: கரும்பில் ஏற்படும் செவ்வழுகல் நோய்.. தவிர்ப்பதற்கான வழிகள் என்னென்ன?!

இலை வண்ண அட்டை மூலம் தழைச்சத்து மேலாண்மை:

  • இலை வண்ண அட்டையை பயன்படுத்தி இலை உரம், மற்றும் மண்புழு உரம் இடுவதால் நெல்லின் வளர்ச்சியையும், மகசூலையும் அதிகரிக்கலாம். மேலும் சரியான நேரத்திற்கு உரங்களையும் இடலாம்.
  • இந்த அட்டையைப் பயன்படுத்தி, நடவு செய்து 14 நாட்கள் அல்லது நேரடி விதைப்பு செய்த 21 நாட்கள் கழித்து அளவீடுகள் எடுக்க வேண்டும்.
  • பூப்பூக்கும் பருவத்திற்கு முன் வரை, வார இடை - வெளியில் அளவீடுகள் எடுக்க வேண்டும். செடியின் மேலிருந்து மூன்றாவது இலையில், காலை 8-10 மணிக்குள், அளவீடுகளை 10 இடத்தில் எடுக்க வேண்டும்.
  • 10க்கு 6 அளவீடுகள் குறிப்பிட்ட வண்ண மதிப்பிற்குக் குறைவான மதிப்பீட்டைக் காட்டினால் தழைச்சத்துகளை இட வேண்டும்.
  • வெள்ளைப் பொன்னிக்கு இலை வண்ண அட்டையின் குறிப்பிட்ட மதிப்பு 3. மற்ற ரகங்கள் மற்றும் வீரிய ரகங்களில் 4க்கு குறைவாக வண்ணம் காணப்பட்டால் தழைச்சத்து இட வேண்டும்.
  • வறண்ட நிலத்தில் ஒரு ஏக்கருக்கு 35 கிலோ தழைச்சத்து மற்றும் 30 கிலோ தழைச்சத்துக்களை இறவைப் பருவத்திலும் இட வேண்டும்.
  • மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள வேளாண் அறிவியல் நிலையங்களை அணுகவும்.