World Pneumonia Day 2024: உலக நிமோனியா தினம்.. ஆண்டுதோறும் நிமோனியாவால் இறக்கும் 6 லட்சம் குழந்தைகள்..!

உலக நிமோனியா தினம் உலகம் முழுவதும், நவம்பர் 12ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

நவம்பர் 12, சென்னை (Special Day): உலக நிமோனியா தினம் (World Pneumonia Day) ஒவ்வொரு ஆண்டும் நவ.12ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. நிமோனியா மற்றும் பிற சுவாச நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படுவதை எதிர்த்து போராட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

வரலாறு (History): இந்த நாள் முதன்முதலில் குழந்தை நிமோனியாவுக்கு எதிரான உலகளாவிய கூட்டணியால் 2009 இல் அனுசரிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு முதல், உலக நிமோனியா தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12 அன்று ஒரு சிறப்பு கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. ​நிமோனியா என்பது பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது பூஞ்சை தொற்றுகளால் அல்வியோலி எனப்படும் நுரையீரலின் காற்றுப்பைகள் பாதித்து உண்டாகும் சுவாச கோளாறு அழற்சி ஆகும். உலகளாவிய அளவில், நிமோனியா ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது. இதனால் வருடத்திற்கு சுமார் 2.5 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர். இதில் அதிகமான மரணங்கள் இந்தியா மற்றும் சஹாரா பகுதிகளில் நடைபெறுகிறது. உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 6 லட்சம் குழந்தைகள் நிமோனியாவால் இறக்கின்றனர். Agriculture Tips: பயிர்கள் வளர்ச்சிக்கான சூப்பர் டிப்ஸ்.. யூரியாவிற்கு பதில் தயிர் கலவை.. விபரம் உள்ளே.!

நிமோனியா அறிகுறிகள்:

சிகிச்சை முறைகள்: நிமோனியாவுக்கென்று தனிப்பட்ட சிகிச்சை முறைகள் எதுவும் கிடையாது. இன்ப்ளூயன்ஸா மற்றும் நிமோனியா காய்ச்சல் கண்டறியப்பட்டதும் ஆன்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. மேலும் தடுப்பூசியை போட்டுக் கொள்வதன் மூலம் நிமோனியா தாக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். நிமோனியா ஆபத்து உள்ளவர்கள் புகைப்பழக்கம் மற்றும் மது அருந்துதலை முற்றிலும் கைவிட வேண்டும்.