Farmers on Paddy Field (Photo Credit: Facebook)

நவம்பர் 11, புதுடெல்லி (Agriculture Tips): பயிர்கள் இயற்கையாகவே தயிரையில் உள்ள மூலக்கூறுகளை எடுத்துக் கொள்ளும். பயிர்களுக்கு தயிர் ஒரு இம்யூனிட்டு பூஸ்டராக இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்கும். தேமோர், பஞ்சக்கவ்ய கரைசலிலும் தயிர் சேர்க்கப்பட்டு வருகிறது. தயிர், பயிர்களுக்கு யூரியாவிற்கு நிகரான ஊட்டச்சத்தை அளிக்கிறது. Appala Kuzhambu Recipe: அசத்தலான சுவையில் அப்பளக் குழம்பு செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

யூரியாவிற்கு பதில் தயிர் கலவை:

  • 2 லிட்டர் தயிரை ஒரு மண் பானையில் எடுத்துக் கொள்ளவேண்டும். இதில் காப்பர் (தாமிரம்) கம்பி அல்லது ஸ்பூனைப் போட்டு 8-15 நாள்கள் அப்படியே விடவேண்டும். இதன் நிறம் மாறியிருக்கும். இதை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மி.லி என்ற கணக்கில் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம்.
  • தயிரில் காப்பர் கம்பியை வைத்து, காப்பாக்சி குளோரைடு கிடைப்பதால் இந்த கலவை அதிக நுண்ணூட்டங்களுடன் நோய் எதிர்ப்பு தன்மையைக் கொண்டிருக்கிறது. காப்பருக்கு பதில், ஆவாரம் பூக்கள், இலை, விதைகளைப் பயன்படுத்தலாம்.
  • நெல், காய்கறிகள், மக்காச்சோளம், கோதுமை என்று அனைத்துப் பயிர்களின் மீதும் தெளிக்கலாம். பழப்பயிர்கள், மரப்பயிர்கள் என்றால் வேரைச் சுற்றி இடலாம்.
  • இது பயிர்களுக்குத் தேவையான நைட்ரஜன் சத்துக்களை அளிக்கிறது. இதனால் யூரியாவைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
  • இந்தத் தயிர் கலவையை மண்புழு உரத்தோடு (வெர்மி கம்போஸ்ட்) கலந்து பயிர்களுக்குக் அளித்தால் நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறையைத் தீர்க்கும்.
  • பயிர்களைத் தாக்கும் பூஞ்சண நோய்கள், நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும்.
  • மண்புழு உரத்தோடு தயிரைக் கலந்து கொடுக்கலாம். இது உரத்தின் செயல்திறனை அதிகப்படுத்தும்.