World Suicide Prevention Day 2024: உலக தற்கொலை தடுப்பு தினம்.. தற்கொலை எண்ணத்தில் இருந்து மீள்வது எப்படி?!
தற்கொலை தடுப்பு மற்றும் முயற்சிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
செப்டம்பர் 10, புதுடெல்லி (New Delhi): தற்கொலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. அதுவும் இளம் வயதினர் அதிகமாக தற்கொலை செய்து கொள்ளும் நாடுகளில் இந்தியா தான் முதலில் உள்ளது. போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், குடும்ப சண்டையினால் பாதிக்கப்படுபவர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என தினமும் யாரேனும் ஒருவராகவது தற்கொலை செய்து கொள்ளும் செய்தியை நாம் செய்தித்தாளில் பார்க்கின்றோம். இதனால் தற்கொலையை தடுக்கும் விழிப்புணர்வு செய்தியை மக்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் (World Suicide Prevention Day) அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவின் பங்கு: இந்தியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டுமே 1.71 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் இந்த விகிதமானது இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் சராசரியாக தினமும் 320 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்கிறது அரசாங்க அறிக்கை. இவ்வாறு உலகத்திலேயே இந்தியாவில்தான் தற்கொலைகள் அதிகம் நடப்பதாக தகவல்கள் வெளியாகி அதிர்வலைகளையும் ஏற்படுத்தி வருகிறது. Coconut Buttermilk Solution: தாவரங்கள் பூக்கும் தன்மையை அதிகப்படுத்தும் இளநீர் மோர் கரைசல்.. தயாரிப்பது எப்படி?!
மீள்வதற்கான வழிகள்: ஒருவர் நான் இறந்து விடுவேன் என்று திரும்பத் திரும்ப கூறுவதை கவனம் ஈர்ப்பதற்காக கூறுவதாக மற்றவர்கள் அலட்சியம் செய்யக்கூடாது. இவ்வாறு கூறுபவர்கள் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உண்டு. தற்கொலைக்கு மிகவும் பொதுவான அடிப்படை காரணம் மனசோர்வு தான். இதற்கும் வாழ்க்கையில் ஏற்படும் வேலை அழுத்தங்கள், நிதி பிரச்சனைகள், உறவு பிரச்சனைகள் மற்றும் ஆரோக்கியம் என அனைத்திற்கும் தொடர்பு இருக்கிறது.
தற்கொலை எண்ணம் ஏற்பட்டால், மனநல பிரச்னைகளை மருந்து மற்றும் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இதற்காக நீங்கள் ஒரு மனநல மருத்துவரின் உதவியைப் பெற வேண்டும். மேலும் இந்த உதவி எண்களையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணிநேர சேவை)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேர சேவை)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019 (13 மொழிகளில் சேவைகள் கிடைக்கின்றன)
மனித நடத்தை மற்றும் அது சார்ந்த அறிவியல் நிறுவனம் - 9868396824, 9868396841, 011-22574820
தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் – 080 – 26995000