Smart Watches Track Health: ஹார்ட் பீட்., உடல் நலத்தை கண்காணிக்க அசத்தல் ஸ்மார்ட் வாட்ச்.. சிறப்பம்சங்களை தெரிஞ்சுக்கோங்க.!
காய்ச்சலோ, இருமலோ நமக்கு ஏற்படும் போது நாமே சுயமாக உடல்நலம் குன்றி விருதை உறுதி செய்து மருத்துவமனைக்கு சென்றால், அவர்கள் காய்ச்சலின் அளவை கண்டறிய தெர்மாமீட்டர் வைத்து சோதனை செய்வார்கள்.
டிசம்பர், 9: நமது உடல் நலத்தினை கண்காணிக்க இன்றளவில் பல வழிமுறைகள் உள்ளன. காய்ச்சலோ, இருமலோ (Cough, Fever) நமக்கு ஏற்படும் போது நாமே சுயமாக உடல்நலம் குன்றி விருதை உறுதி செய்து மருத்துவமனைக்கு சென்றால், அவர்கள் காய்ச்சலின் அளவை கண்டறிய தெர்மாமீட்டர் வைத்து சோதனை செய்வார்கள். இன்றளவில் அது டிஜிட்டல் முறைக்கு வந்துவிட்டது.
அதனைப்போலவே, காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப விரைந்துஸ் இயல்பட்டு வரும் நமக்கு நமது உடல் செய்லபாடுகளை கண்காணிக்க பல வழிமுறைகள் ஸ்மார்ட் யுகத்தில் கிடைத்துவிட்டது. அந்த வகையில், கைக்கடிகாரத்தில் (Watch) நமது இதய துடிப்பை கண்காணிப்பது, உடல் நலனை நொடிக்குநொடி சீராக உளளதா? என சோதனை செய்து தெரிவிப்பது தொடர்பான தொழில்நுட்பங்கள் கிடைத்துவிட்டது.
இதில், நமது உடல்நலனை பராமரிக்க சரிவர துல்லிய தகவலை கூறும் 3 ஸ்மார்ட் கைக்கடிகாரம் (Smart Watches) தொடர்பான விபரங்களை இன்று காணலாம்.
Fitbit Versa 2 (உடல்நலம் & உடற்பயிற்சிக்கான ஸ்மார்ட்வாட்ச்): பிட்பிட் வெர்ஸா 2 ரக ஸ்மார்ட் கைக்கடிகாரம் உடற்பயிற்சி மற்றும் உடல்நலனுக்கான சாராம்சத்தை பூர்த்தி செய்யும் வகையில் அதிநவீனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது இதய துடிப்பை துல்லியமாக கணித்து கூறுகிறது. அதனைப்போல, நமது உறக்கம், அமைதியின்மை போன்று பல்வேறு உடல்சர் பிரச்சனைகளை துல்லியமாக கணித்து கூறுவதால் உடல் நலனை பேணும் பலராலும் விரும்பப்படுகிறது.
சிறப்பம்சங்கள்: 24X7 இதயத் துடிப்பைக் கண்காணிப்பது, 6 நாட்கள் பேட்டரி ஆயுள், 50 மீட்டர் ஆழம் வரை நீர் புகா தன்மை.
நிறம்: இந்த கைக்கடிகாரம் காப்பர் ரோஸ் நிறத்தில் கிடைக்கிறது.
தொழில்நுட்பம்: OS இயங்குதளத்தை கொண்டுள்ள Fitbit Versa 2 Apple iPhone 6 Plus வகையானது ஆகும். இது ப்ளூடூத் கொண்டு மொபைல்களுடன் இணைக்கப்படுகிறது. இது 70 கிராம் எடை கொண்ட வாட்ச் ஆகும். 10 டிகிரி செல்ஸியஸ் முதல் 60 டிகிரி செல்ஸியஸ் வரை இயங்கும் தன்மை கொண்டது. இதன் விலை ரூ.12 ஆயிரம் ஆகும். Romantic Love Movies: காதலில் நம்மை கரையவைத்த டாப் 10 படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ..!
Amazfit T-Rex Smartwatch: பிற கைக்கடிகாரங்களை போல அல்லாமல் ஜி.பி.எஸ் இணைப்புடன் 40 மணிநேரம் வரை பேட்டரி தாகும் திறன் இருப்பதால் பல பயனர்களும் Amazfit T-Rex ரக ஸ்மார்போனை விரும்புகின்றனர். இது உயரமான இடங்களில் பயணம் செய்யும் போது, எவ்வித கோளாறும் இன்றி நமது உடல் இயக்கத்தை கூறுகிறது. அதனைப்போல இது குறைந்தபட்சம் 20 மணிநேரம் பேட்டரி தாங்கும் சக்தியை கொண்டது ஆகும்.
சிறப்பம்சங்கள்: ஒருமுறை சார்ஜ் போட்டால் 20 மணிநேரம் உபயோகம் செய்யலாம், 14 வகையான விளையாட்டு முறைகள், நீர் எதிர்ப்பு திறன்.
தொழில்நுட்பம்: ஆன்ராயிடு 5.0, iOS 10.0, iPhone X OS இயங்குதலை கொண்டுள்ள Amazfit T-Rex ஸ்மார்ட் கைக்கடிகாரம் புளூடூத், சி.என்.எஸ்.எஸ்., ஜி.பி.எஸ் உதவியுடன் இணைக்கும் அமைப்பு கொண்டது ஆகும். 92 கிராம் எடை கொண்டது ஆகும். இது இராணுவத்தால் அங்கீகரிக்கப்படும் ஸ்மார்ட்காடிகாரங்களில் ஒன்றாகும். இதன் விலை ரூ.8,200 ஆகும்.
Fossil Gen 5 Carlyle (துருப்பிடிக்காத எக்கு தொடுதிரை): நீச்சல் சாராம்ச வடிவமைப்புடன் தயார் செய்யப்பட்ட Fossil Gen 5 Carlyle ஸ்மார்ட் கைக்கடிகாரம், வேகமாக சார்ஜ் செய்யும் பேட்டரியை கொண்டுள்ளது. இதன் தொடுதிரை பயனர்களுக்கு விரும்பக்கூடிய வகையில் இருப்பதால், அதனை பலரும் வரவேற்கின்றனர்.
சிறப்பம்சங்கள்: Google Fit அமைப்புடன் பொருந்தி செயல்படும் கைக்கடிகாரம் சிறந்த கண்காணிப்பு திறன் கொண்டுள்ளது. அதனைப்போல நீச்சல் தடுப்பு வடிவமைப்பும் இருக்கிறது.
தொழில்நுட்பங்கள்: ஆன்ராயிடு மற்றும் iOS இயங்குதளங்கள் கொண்ட Fossil Gen 5 Carlyle ஸ்மார்ட் கைக்கடிகாரம், புளூடூத் - வைபை - ஜி.பி.எஸ் கொண்டு இணைக்கப்படும். 80 கிராம் எடையுள்ள கைக்கடிகாரம் நமது உடல் நலத்தையும், இதய துடிப்பையும் கண்காணித்து கூறும் கைக்கடிகாரமாகும். இதன் விலை ரூ.12 ஆயிரம் ஆகும்.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 9,2022 06:05 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)