Good Bad Ugly (Photo Credit: @PrathyangiraUS X)

ஏப்ரல் 10, சென்னை (Cinema News): தமிழ் திரைப்பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly Movie). இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். மேலும், அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில் இப்படம் அமைந்துள்ளது. திரிஷா இல்லனா நயன்தாரா, மார்க் ஆண்டனி படத்துக்கு பின்னர், அஜித்துடன் இணைந்துள்ளார். அதேபோல, சமீபத்தில் படத்தின் ஓஜி சம்பவம், காட் ப்ளஸ் யு பாடல்கள், மிரளவைக்கும் ட்ரைலர் காட்சிகள் வெளியாகி வைரலாகி இருந்தது. Good Bad Ugly Sensor & Duration: குட் பேட் அக்லி படத்துக்கு யுஏ சான்றிதழ்.. காட்சி மணிநேரம் எவ்வுளவு? வெளியானது அப்டேட்.!

குட் பேட் அக்லி ரிலீஸ்:

ரூ.250 கோடி செலவில் உருவாகியுள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில், உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று (ஏப்ரல் 10) வெளியாகியது. இன்று காலை முதல் ஷோ வெளியாகி ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இப்படம் முதல் ஷோ வெளியாகி கொண்டாடி வரும் வேளையில், இணையத்தில் கசிந்துள்ளது. படம் வெளியான முதல் நாளிலேயே, படம் இணையத்தில் வெளியானதால், படக்குழு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது.