ஏப்ரல் 10, புதுடெல்லி (New Delhi): சைபர் குற்றங்களை அரங்கேற்றும் நபர்கள் ஒவ்வொரு நாளும் புதுவிதமான மோசடி செயலை அரங்கேற்றி வருகின்றனர். இவ்வாறான குற்றங்களை தடுப்பது காவல் துறையினருக்கு தலைவலியாக இருந்தாலும், குற்றச்செயலில் ஈடுபடுவோர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வாட்சப் படம் ஒன்றை மோசடியாளர்கள் லிங்குடன் வைத்து அனுப்பி, நமது செல்போனுக்குள் ஊடுருவி நமது விபரங்களை கண்காணித்து மோசடி செயலில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. நமக்கே தெரியாமல் செல்போனின் பின்னணியில் இயங்கும் இவ்வகை வைரஸ்கள் நமது செல்போனுக்கு வரும் ஒடிபி, வங்கிக்கணக்கு உட்பட பிற விஷயங்களை கண்காணிக்கிறது. New Aadhaar App: புதிய ஆதார் செயலி அறிமுகம்.. மத்திய அரசு சூப்பர் அப்டேட்.., முழு விவரம் இதோ..!
வாட்ஸப்பில் புதிய மெசேஜ் வந்தால் கவனம்:
புதிய வாட்சப் எண்ணில் இருந்து வந்த லிங்கை தெரியாமல் தொட்ட நபர் ரூ.2 இலட்சம் பணத்தை இழந்துள்ளார். இந்த சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் நடந்துள்ளது. இந்த மோசடிக்கு பின்னரே அதிகாரிகளுக்கு இவ்வாறான புதிய மோசடி நடப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிகாரிகள் கவனமுடன் இருக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளனர். தங்களுக்கு அறிமுகம் இல்லாத நபர்கள் பேசினாலும், அவர்கள் அனுப்பிய லிங்கை எக்காரணம் கொண்டும் திறக்க வேண்டாம். ஒருசில மோசடிகள் புகைப்படத்தை அனுப்பி பதிவிறக்கம் செய்த பின்னர், அதன் வாயிலாகவும் வைரஸை அனுப்பி மோசடி செயலை அரங்கேற்றுகின்றனர் என அதிகாரிகள் கூறுகின்றனர்.