
ஏப்ரல் 10, சென்னை (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) கிரிக்கெட் போட்டியில், இதுவரை 23 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இன்று பெங்களூரில் ஆர்சிபி - டிசி அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறுகிறது. நடப்பு தொடரில் முதல் வெற்றிக்குப்பின்னர் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி மோசமான விமர்சனங்களையும் எதிர்கொள்கிறது. அந்த அணியின் கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் இருக்கிறார். தோனிக்காக மைதானம் வந்து கிரிக்கெட் போட்டியை நேரில் பார்த்த பலரும், அணியின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை விமர்சிக்கும் அளவு சென்னை அணி செயல்பாடுகளை வெளிப்படுத்தியது. RCB Vs DC: ஐபிஎல் 2025: பெங்களூர் Vs டெல்லி அணிகள் இன்று மோதல்.. மேட்ச் அப்டேட் இதோ.!
சிஎஸ்கே கேப்டன் மாற்றம் (CSK Captain):
இந்நிலையில், சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் உடலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு தொடரில் இருந்து விலகலாம் என்றும், இதனால் கேப்டன் பொறுப்பு மீண்டும் எம்.எஸ் தோனிக்கு வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முழங்கை எலும்பு முறிவு காரணமாக தொடரில் இருந்து விலகும் ருத்ரஜின் கேப்டன் பொறுப்புகளை இனி தோனி தலைமையேற்று கவனிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கே கேப்டன் பொறுப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள வலைப்பதிவு:
🚨 BREAKING: Ruturaj Gaikwad has been ruled out of the IPL due to an elbow fracture
MS Dhoni will captain CSK for the rest of the IPL...#IPL2025 #MSDhoni #CSK #IPL pic.twitter.com/BCTmFySQ0r
— Cricbuzz (@cricbuzz) April 10, 2025