ஏப்ரல் 10, சமஸ்திபூர் (Bihar News): பீகார் மாநிலம், சமஸ்திபூர் (Samastipur) மாவட்டத்தின் மொஹியுதீன்நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தாண்டா கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் முகேஷ் சிங். இவரது மகள் சாக்ஷி (வயது 20) மாற்று சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவர, இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் இருவரும் கடந்த மார்ச் 4ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி டெல்லிக்குச் சென்றனர். 2 ஆண்டுகளில் 25 பிரசவங்கள், 5 முறை கருத்தடை.. அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்..!
பெண் ஆணவக்கொலை:
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அப்பெண் டெல்லியில் இருந்து மொஹியுதீன் நகருக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர், அவரது தந்தை தனது மகளை கழுத்தை நெரித்து (Murder) கொன்றார். பெண்ணின் தாயார் அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, சிறுமியின் உடலை அவரது வீட்டின் குளியலறையில் மீட்டனர். உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சதார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில், பெண் மாற்று சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்ததால், அவரது தந்தை ஆணவக்கொலை செய்தது தெரியவந்தது. இதனால், அப்பெண்ணின் தந்தை முகேஷ் சிங்கை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.