Amla Juice Recipe: ஆரோக்கியத்திற்கு அற்புதம் செய்யும் அரை நெல்லிக்காய் ஜூஸ் செய்வது எப்படி? விபரம் உள்ளே!

அரை நெல்லி ஜூஸ் மற்றும் அதன் நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Amla (Photo Credit: Pixabay)

ஜூலை 31, சென்னை (Kitchen Tips): நெல்லி (Amla) பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு அற்புதமான காய். இது ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படுகிறது. நெல்லிக்காய் வைட்டமின் சி நிறைந்து உள்ளது. இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் தினமும் நெல்லி சாற்றை வெறும் வயிற்றில் குடிக்கலாம். பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த ஜூஸை எடுத்துக்கொள்ளும் முன்னர் மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்வது சிறந்தது. இதனை வீட்டிலேயே எப்படி தயார் செய்யலாம் என்பது குறித்தும் இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள். Sambar Sadam Recipe: ஹோட்டல் சுவையில் கமகமக்கும் சாம்பார் சாதம்.. சுவையாக செய்வது எப்படி?!

தேவையான பொருட்கள்:

அரை நெல்லிக்காய் - 3

இஞ்சி குட்டியாக நறுக்கியது - 1

புதினா இலைகள் - 6

தண்ணீர் - 2 கப்

செய்முறை:

அரை நெல்லிக்காய், புதினா இலைகள் மற்றும் இஞ்சினை நன்றாகக் கழுவி இடித்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். அதனுடன் அந்த கலவையை சேர்த்து தண்ணீர் அரைப்பங்கு குறையும் வரை கொதிக்க வைக்கவும். பின் ஒரு கப்பில் அந்த தண்ணீரை வடிகட்டவும். இதை மிதமான சூட்டில் வெதுவெதுப்பாக குடிப்பது நல்லது.