ஜூலை 30, சென்னை (Cooking Tips): மதிய உணவுக்கு என்ன செய்வது என்று யோசிப்பது ஒரு சவால். ஆனால் அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை விருந்து மற்றும் விழாக்களில் மட்டுமல்ல வீடுகளிலும் அடிக்கடி இடம்பெறும் ரெசிபியாக உள்ளது சாம்பார் சாதம் தான். ஹோட்டல் சுவையில் கமகமக்கும் சாம்பார் சாதத்தை (Sambar Sadam) எப்படி செய்வது என்று இப்பதிவில் நாம் காணலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி- 1 டம்ளர்
துவரம்பருப்பு- 1/4 டம்ளர்
புளித்தண்ணீர்- 1 டம்ளர்
கேரட்- 1
பீன்ஸ்- 5
உருளைக்கிழங்கு- 2
பச்சை பட்டாணி- 1/4 டம்ளர்
சின்ன வெங்காயம்- 12
பெரிய தக்காளி- 1
பச்சை மிளகாய்- 1
மிளகாய்த்தூள்- 1 ஸ்பூன்
கொத்தமல்லி தூள்- 1/4 ஸ்பூன்
கருவேப்பிலை- 10
உப்பு, எண்ணெய், பெருங்காயம்- தேவைக்கேற்ப Beetroot Rasam Recipe: பீட்ரூட் ரசம் மிக சுவையாக செய்வது எப்படி? சமையல் ராணியாக தெரிஞ்சிக்கோங்க..!
செய்முறை:
குக்கரில் எண்ணெய் ஊற்றி, கருவேப்பிலை, பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து தாளித்து, பின் வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். அதோடு காய்களை சேர்த்து வதக்கவும்.
காய்கறி கலவையோடு3 1/2 தம்ளர் தண்ணீர், 1 டம்ளர் புளித்தண்ணீர் சேர்த்து கொதித்தவுடன் உப்பு, மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், அரிசி, பருப்பு இவற்றை சேர்த்து 4 விசில் விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். அவ்வளவு தான் சுவையான சாம்பார் சாதம் ரெடி.