Moong Dal Idly: ஒரு முறை இந்த பாசிப்பருப்பு இட்லி செய்து பாருங்க... எவ்வளவு சுவை..!
பாசிப்பருப்பு இட்லி செய்யும் முறை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜனவரி 10, சென்னை (Chennai): எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க, பாசிப்பருப்பை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் உள்ள குறைந்த கலோரி எடையைக் கட்டுப்படுத்தும். பசியைக் கட்டுப்படுத்தும் நார்ச்சத்தும் இதில் போதுமான அளவில் உள்ளது. இதை உட்கொள்வதன் மூலம், நீங்கள் மீண்டும் மீண்டும் பசியை உணர மாட்டீர்கள், இதன் விளைவாக எடையைக் குறைப்பதில் உதவி கிடைக்கும். அப்படிப்பட்ட பாசிப்பருப்பை வைத்து எவ்வாறு இட்லி செய்யலாம் என்று இந்த பதிவில் காணலாம். Bengaluru CEO Kills Son: கணவரை பழிவாங்க 4 வயது மகனை கொன்ற கொடூரத் தாய்... திடுக்கிடும் தகவல்கள்..!
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு-1 கப்
சமையல் எண்ணெய்- 1 ஸ்பூன்
கடுகு-1/2 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 3
பெருங்காயத்தூள்- 1/4 ஸ்பூன்
துருவிய கேரட்- 1/4 கப்
கொத்தமல்லி- சிறிதளவு
இஞ்சி - 1 துண்டு
உப்பு- 1 ஸ்பூன்
ஈனோ- 1 ஸ்பூன்.
செய்முறை:
பாத்திரத்தில் ஒரு கப் பாசிப்பருப்பு சேர்த்து கழுவிக் கொள்ளவும். 2 மணி நேரம் ஊற வைத்த பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொண்டு பின்னர் ஒரு பேனில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும், அரை ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் 3 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். பின்னர் தயார் செய்து வைத்துள்ள மாவில் தாளித்தவற்றை சேர்க்கவும். Pongal Festival in Tamilnadu: தமிழகத்தில் களைகட்டும் பொங்கல்.. குத்தாட்டம் போடும் மாணவிகள்..!
அதனுடன் கால் கப் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். பின்னர் ஒரு தேக்கரண்டி ஈனோ (Eno) மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி தயார் செய்து வைத்துள்ள மாவில் இட்லி ஊற்றவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து சூடானதும் இட்லி தட்டுகளை வைத்து மூடி வைக்கவும். அவ்வளவு தான் சுவையான பாசிப்பருப்பு இட்லி தயார்.