ஆகஸ்ட் 26, நிஜாமாபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜமாபாத் மாவட்டம் நந்திபேட்டை, குதவன்பூர் (Kudwanpur Primary School) கிராமத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பயிலும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியராக சங்கர் என்பவர் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று சங்கர் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தபோது சில மாணவர்கள் ஒழுங்கீனமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இளம்பெண்ணின் வாயில் வெடிமருந்து குச்சியை திணித்து வெடிக்க வைத்த கள்ளக்காதலன்.. லாட்ஜில் கதறக்கதற நிகழ்ந்த பயங்கரம்.!
மாணவர்களின் கண்கள் மற்றும் காதுகளில் மிளகாய் பொடியை தூவிய ஆசிரியர் :
இதனால் ஆத்திரமடைந்தவர் அந்த மாணவர்களின் கண்கள் மற்றும் காதுகளில் மிளகாய் பொடியை தூவி இருக்கிறார். மிளகாய் பொடியின் காரம் தாங்காமல் அலறிய மாணவர்கள் வீட்டுக்குச் சென்று இது குறித்து கூறியுள்ளனர். இதனை கேட்டு ஆவேசமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவலை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியர் சங்கர் தலைமறைவான நிலையில், அவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.