Pongal Festival in Tamilnadu (Photo Credit: @backiya28 X)

ஜனவரி 10, கன்னியாகுமரி (Kanyakumari): பொங்கல் பண்டிகையானது 4 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. போகி பொங்கல், தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் ஆகும். இந்த நான்கு தினங்களுக்கும் தனி தனி சிறப்பு பெயர் உள்ளது. தமிழர்கள் எத்தனை வகையான விழாக்கள் கொண்டாடினாலும் முதன்மை பெற்றுள்ளது இந்த பொங்கல் பண்டிகை. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் சமத்துவ பொங்கலிட்டு மாணவிகள் கொண்டாடி வருகின்றனர். Dead Cockroach In Biryani: கரப்பான் பூச்சி பிரியாணி பரிமாறிய பிரபல உணவகம்.. இது என்ன புது ரெசிபியா..!

பிரம்மாண்ட கோலங்கள்:

பாளையங்கோட்டை அரிசி சித்த மருத்துவக் கல்லூரியில் இன்று இரண்டாவது நாளாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முதல் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் தொடர்ந்து இன்று வைபவம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்காக அதிகாலை முதல் கல்லூரி பல்வேறு பிரிவு மாணவ மாணவிகள் மைதானம் முழுவதும் பலவண்ண கோலங்களை இட்டு கரும்பு உள்ளிட்டவைகளை கட்டி தயார் படுத்தினர்.

மாணவிகள் சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ச்சி:

சமத்துவ தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 65 ஆண்டு பாரம்பரியமிக்க பாளை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் ஆண்டுதோறும் சிறப்பாக 2 நாள் விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு நேற்றும், இன்றும் நடைபெற்றது. இன்று காலை துறைவாரியாக மாணவ மாணவிகள் 12 பானைகளில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். TN Advocate General Resigns: அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா.. காரணம் என்ன?.!

குத்தாட்டம் போடும் மாணவிகள்:

இதைதொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகள் செண்டை மேளம் முழங்க ஆடி பாடி மகிழ்ந்தனர். கல்லூரி வளாகம் முழுவதும் மகிழ்ச்சி கலை கட்டியது. ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

விவசாயிகளாக மாறிய பள்ளி மாணவர்கள்:

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி நிர்வாகம் ஒன்று அவர்களுக்கு சொந்தமான வயல்வெளியில் பள்ளி மாணவர்களை வைத்தே கடந்த செப்டம்பர் நெல்லை விதைத்து மாணவர்களை வைத்தே நெல் கதிரை அறுவடையும் செய்துள்ளனர். இந்த அரிசியை பயன்படுத்தி தான் பொங்கல் பண்டிகை அன்று பொங்கலிடவும் உள்ளனர். இதில் ஆர்வத்துடன் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.