நவம்பர் 05, சென்னை (Kitchen Tips): தமிழ்நாட்டில் பொதுவாக பண்டிகைகள், வீட்டு சுப நிகழ்ச்சி விருந்துகளில் முக்கியமாக கேசரி இடம்பிடிக்கும். பொதுவாக, வீட்டில் ரவை மற்றும் சர்க்கரை சேர்த்து செய்யப்படும். பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்றான கேசரியை சற்று வித்தியாசமாக, கேரட் பயன்படுத்தி செய்து சாப்பிட்டால், இன்னும் சுவையாக இருக்கும். அந்தவகையில், தித்திக்கும் சுவையில் கேரட் கேசரி (Carrot Kesari Recipe) எப்படி செய்வது என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். Lunch Box Recipe: 30 நிமிடத்தில் வெண்டைக்காய் முட்டை சோறு.. குழந்தைகளுக்கான ஹெல்த்தி டிபன் பாக்ஸ் ரெசிபி.!
தேவையான பொருட்கள்:
- கேரட் - 4
- ரவை - 2 கப்
- சர்க்கரை - 2 கப்
- முந்திரி - 10
- ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
- நெய் - தேவையான அளவு
கேரட் கேசரி செய்முறை:
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் 5 தேக்கரண்டி நெய் ஊற்றி, ரவையை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுத்து, நெய் 5 தேக்கரண்டி விட்டு, 10 முந்திரியை பொரித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- இதன்பின்னர், கேரட்டை சிறியதாக வெட்டி அதை மிக்ஸியில் அரைத்து நைசாக எடுத்துக் கொள்ளவும். கடாயில் மீதமிருக்கும் நெய்யில் நன்றாக கேரட்டை சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
- பின், வறுத்து வைத்திருக்கும் ரவையை, இதனுடன் சேர்த்து 2 நிமிடம் கலந்துவிட்டு தேவையான அளவு சுடுதண்ணீரை சேர்த்து வேகவிடவும். ரவை வெந்ததும் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும்.
- இறுதியில், ஏலக்காய்பொடி சேர்த்து, வறுத்து வைத்திருக்கும் முந்திரியை சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும். அவ்வளவுதான் தித்திக்கும் சுவையில் கேரட் கேசரி தயார்.