Pineapple Curd Curry: உடலை குளிர்ச்சியாக வைக்க அன்னாசிப்பழ மோர்க்குழம்பு.. செய்வது எப்படி?.!

அன்னாசி பழ மோர்க் குழம்பை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Pineapple Curd Curry (Photo Credit: @NeethaRajeev X)

ஜனவரி 15, சென்னை (Chennai): அன்னாசிப்பழத்தில் பல்வேறு ஊட்டச்சத்துகளும், தாதுக்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன. மோருக்கும் பல்வேறு மருத்துவக் குணங்கள் உள்ளன. இவை இரண்டையும் வைத்து ருசியும் சத்தும் நிறைந்த அன்னாசிப்பழ மோர்க்குழம்பு (Pineapple Curd Curry) எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானவை:

எண்ணெய் - 5 ஸ்பூன்

கடுகு - 1/4 ஸ்பூன்

கறிவேற்பிலை - 10 இலைகள்

பெருங்காயத்தூள் - சிறிதளவு

துவரம் பருப்பு - 3 ஸ்பூன்

மிளகு - சிறிதளவு

சீரகம் - 1 ஸ்பூன்

தேங்காய் - 1 சில்

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - சிறிதளவு

அன்னாசி பழம் - 1 கப்

வரமிளகாய் - 2

தயிர் - 1 கப் Jawa 350: ஜாவா 350 மோட்டார்சைக்கிள் அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா?.!

செய்முறை: அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் கடுகு, கறிவேற்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து பின் அன்னாசி பழத்துண்டுகளை சேர்த்து வதக்கி விட்டு சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும்.

ஒரு மிக்சி ஜாரில் அரிசி, துவரம் பருப்பு, மிளகு, சீரகம் மற்றும் தேங்காய் சேர்த்து அரைத்து பின் அதில் தயிர் சேர்த்து மீண்டும் அரைத்து அதனை கடாயில் சேர்த்து அடுப்பின் தீயனை சிம்மில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். துவரம் பருப்பும் வாசனை செல்லும் வரை சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். அவ்வப்போது கிளறி விட வேண்டும். School Girl Raped: இன்ஸ்டா காதலனை நம்பிச் சென்ற சிறுமி 3 நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம்: 23 வயது இளைஞன், இரண்டாவது முறை போக்ஸோவில் கைது.! அதிர்ச்சி பின்னணி..!

மோர்க்குழம்பு நுரைத்து வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி விட்டு இரண்டு வரமிளகாய் சேர்த்து தாளித்து இதில் சேர்த்து பரிமாறினால் அருமையான பைனாப்பிள் மோர்க்குழம்பு ரெடி! நீங்களும் ஒரு முறை ட்ரை செய்து அசத்துங்க!