World Idli Day 2024: காலையில் காணும் நிலவுக்கு இன்று விசேஷ தினம்.. ஆவி பறக்க இட்லி தினத்தைக் கொண்டாடுங்கள்..!

உலக இட்லி தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 26 அன்று கொண்டாடப்படுகிறது.

World Idli Day 2024 (Photo Credit: @LatestLy X)

மார்ச் 26, சென்னை (Chennai): "இட்லி" தென்னிந்தியாவில் இந்த மூன்றெழுத்து உணவு இல்லாத ஹோட்டல்களே இல்லை என்று கூறி விடலாம். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபாவளி போன்ற சிறப்பு தினங்களில் மட்டுமே வீடுகளில் அத்திப் பூத்தது போல் சமைக்கப்பட்ட இந்த இட்லியை, தமிழகத்தில் இன்று இட்லி வேகாத வீடுகளும், ஹோட்டல்களும் இல்லை என்ற அளவுக்கு நம்மவர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துவிட்டது. Bannari Amman Temple Festival: கோலாகலமாக நடைபெற்று முடிந்த பண்ணாரி அம்மன் கோவில் பூமிதி திருவிழா: சிறப்பு காட்சி இதோ..!

இத்தனை சிறப்புகள் வாய்ந்த இட்லியை சிறப்பிக்கும் வகையில் உலக இட்லி தினம் (World Idli Day) கடந்த 2015ம் ஆண்டு முதல் முதலாக சென்னையில்தான் கொண்டாடப்பட்டது. கடந்த 17ம் நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டு மக்கள் இட்லி என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்தோனேஷியா தான் இட்லியின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தோனேஷியாவில் இட்லி தயாரிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. பல ஆயிரம் ஆண்டு வரலாற்றை உள்ளடக்கிய ஆவி பறக்கும் இட்லி இன்று தென்னிந்தியாவை, குறிப்பாக தமிழகத்தில் நீக்கமற எங்கும் நிறைந்துள்ளது.