மார்ச் 26, ஈரோடு (Erode News): ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம், பண்ணாரி கிராமத்தில் அமைந்துள்ள பண்ணாரி அம்மன்(Bannari Amman Temple) கோவிலில் பங்குனி மாத திருவிழா நேற்று பூமிதியுடன் சிறப்பாக நடைபெற்றது. தெற்கு திசை நோக்கி சுயமாக காட்சி தரும் அம்மன், உலகப் பிரசித்தி பெற்ற பண்ணாரியாக அங்கு எழுந்தருளி இருக்கிறார்.
பங்குனி உத்திர திருவிழா: ஒவ்வொரு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடைபெறும் இந்த திருவிழாவில், தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த பக்தர்களும் திரளாக வந்து கலந்துகொள்வர். அம்மனுக்கு விரதமிருந்து பூமிதிக்கும் நிகழ்வுகள் வெகு விமர்சையாக நடைபெறும்.
பூமிதி திருவிழா: அந்த வகையில், நடப்பு ஆண்டிலும் பங்குனி உத்திரமான நேற்று பக்தர்கள் பயபக்தியுடன் விரதமிருந்து பூமிதித்தனர். இந்த கோவிலில் வேறு எங்கும் இல்லாத வகையில் பூமிதி திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடனை முடித்தவுடன் கால்நடைகளும் பூமிதியில் ஈடுபடும். இது தொடர்பான சிறப்பு வீடியோ காட்சிகள் உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது.
#WATCH | Erode, Tamil Nadu: Devotees take part in a ritual of walking on embers at Bannari Amman Temple, near Sathyamangalam, Erode District. pic.twitter.com/dAgRPnXx7T
— ANI (@ANI) March 26, 2024