Use of Leaf Color Chart: இலை வண்ண அட்டை.. பயன்படுத்துவது எப்படி.? விபரம் உள்ளே..!
சேலம் மாவட்டத்தில் வேளாண்மை கிராமப்புற அனுபவ பயிற்சி மேற்கொள்ளும் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு இலை வண்ண அட்டை பயன்படுத்தும் முறை பற்றி பயிற்சி அளித்தனர்.
மே 22, சேலம் (Salem): சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி வட்டத்தில் வேளாண்மை கிராமப்புற அனுபவ பயிற்சி மேற்கொள்ளும் பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் அம்மாபாளையம் விவசாயிகளுக்கு இலை வண்ண அட்டை பயன்படுத்தும் முறை பற்றி பயிற்சி அளித்தனர். அட்டையை பயன்படுத்தி நெற்பயிர்களில் உள்ள நைட்ரஜன் அளவை கண்டறிந்து அதற்கேற்ற அளவிலான உரத்தை இதெல்லாம் மேலிருந்து முழுமையாக திறக்கப்பட்ட மூன்றாவது இலையில் இலையின் நிறத்தை குறியீட்டு இணையாக கவனிக்க வேண்டும் காலையில் நேரத்தில் காலை 8 முதல் 10 மணி அட்டவணையில் உள்ள வண்ணங்களுடன் இளைநிறத்தை பொருத்தி பத்து இடங்களில் கவனிக்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தினர்.
இந்த அட்டையில் இரண்டு மூன்று நான்கு ஐந்து என்று பச்சை நிறம் பதிக்கப்பட்டு இருக்கும் என்னால் ஐந்து உடன் ஒப்பிடும் இலையின் வண்ணம் சரியாக இருந்தால் யூரியா இட தேவையில்லை எண் மூன்று உடன் ஒப்பிட்டு ஆனால் பொன்னி ரக நெல்லுக்கு மட்டும் எண் 2 உடன் ஒப்பீடு ஆனால் ஏக்கருக்கு 12 கிலோ தலைச்சத்தும் அதாவது 25 கிலோ இட வேண்டும் அட்டைப் பயிர் எண்ணிக்கை சரியாக உள்ள பகுதியில் நோய் மற்றும் பூச்சி தாக்காத இலையை தேர்வு செய்ய வேண்டும். நேரடி நெல் விதைப்புக்கு 21 நாட்கள் பிறகும் கடைசியாக பயிர் பூக்க துவங்கும் போது அளவெடுத்து இழை வண்ண அட்டை பயன்படுத்த வேண்டும். Italian Open Tennis 2024: இத்தாலி ஓபன் டென்னிஸ்.. நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக்..!
சம்பா பருவத்தில் பத்து நாட்கள் ஒருமுறை அளவு எடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் காலை அல்லது மாலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சூரிய வெளிச்சம் பின்னால் இருக்கும் படி அளவீடு செய்ய வேண்டும். அதன் மூலமாக பூச்சி தாக்குதலை தவிர்க்கலாம் மற்றும் யூரியா உபயோகிப்பதை குறைக்கலாம். மேலும் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் அனைவரும் அட்டை பயன்படுத்தி உரம் இடுமாறு ஊக்குமளித்தனர்.