Iga Swiatek (Photo Credit: @iga_swiatek X)

மே 22, ரோம் (Sports News): இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்துவருகிறது. இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் 2 முறை சாம்பியனும், நம்பர் 1 வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக் (Iga Swiatek), பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா (Aryna Sabalenka) உடன் மோதினார். இதில் ஸ்வியாடெக் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். TN Weather Report: கொட்டித் தீர்க்கும் கனமழை.. மீனவர்களுக்கான எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

இதன்மூலம் 3-வது முறையாக இத்தாலி ஓபனில் (Italian Open title) ஸ்வியாடெக் 3வது முறையாக பட்டம் வென்று அசத்தியுள்ளார். 23 நாட்களில் மாட்ரிட் ஓபன், இத்தாலி ஓபனில் அடுத்தடுத்து கோப்பையை முத்தமிட்டுள்ள அவர் அடுத்து நடைபெற உள்ள பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரிலும் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.