ஆகஸ்ட் 23, சென்னை (Health Tips Tamil): ஒவ்வொரு நாளும் பரபரப்பான வேலைகளுக்கு நாம் பழகிவிட்டோம். இதில் அமைதி, ஆறுதல் போன்ற விஷயத்துக்காக யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஷார்ட்ஸ் பார்ப்பது பலருக்கும் பிரியமான ஒன்றாக மாறிவிட்டது. இரவு தூக்கம் உட்பட பலவிதமான விஷயங்களையும் அவர்கள் மறந்து போய் ஷார்ட்ஸ் பார்த்து அடிமையாகி வருகின்றனர். இந்த ஷார்ட்ஸ் மிகப்பெரிய ஆபத்தை தரும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
மன ஆரோக்கியம் பாதிக்கப்படும்:
வீடியோவை மன மகிழ்ச்சிக்காக அல்லது பொழுதுபோக்குக்காக சில நிமிடங்கள் பார்க்கலாம் என்று நினைத்து நாம் பார்ப்பது நமது மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்பெல்லாம் மது பழக்கம் மிகப்பெரிய தீமையான பழக்கமாக இருக்கும். அதற்கு அடிமையானால் மீண்டும் அதிலிருந்து வருவது கடினமான விஷயமாக இருக்கும். அதே போல ஷார்ட்ஸ் வீடியோவை பார்ப்பதும் நரம்பியல் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்றும், இதனை சரிவர கவனிக்காத பட்சத்தில் நினைவாற்றல் தொடர்பான சிக்கலும் ஏற்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. Thiruvonam 2025: ஓணம் 2025: கொண்டாடப்படுவது ஏன்? விஷ்ணு வாமன உருவம் எடுக்க காரணம் என்ன?
மதுவைவிட கேடு:
இந்த விஷயம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் அதிர்ச்சி தகவலானது வெளியாகி உள்ளது. சர்வதேச அளவில் நடைபெற்ற ஆய்வுகளில் அதிக நேரம் ரீல்ஸ் பார்ப்பது, மதுபானம் அருந்துவதை விட ஐந்து மடங்கு அதிகமான தீமையை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூக்கம், மன ஆரோக்கியம், மனச்சோர்வு, மன அழுத்தம், அறிவாற்றல் குறைபாடு, நிறைவாற்றலில் பிரச்சனை என பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியிருக்கின்றன. மூளையில் இருக்கும் கோர்டெக்ஸ் பகுதி முடிவெடுப்பது, கட்டுப்பாடு போன்ற வேலைகளை செய்து வருகிறது. Ganesh Chathurthi 2025: விநாயகர் சதுர்த்தி 2025: எத்தனை நாட்கள் விநாயகரை வீட்டில் வைத்து வழிபடலாம்?
குடும்பத்தை கொண்டாடுங்கள்:
ரீல்ஸ் வீடியோக்களை நாம் அதிக நேரம் பார்த்து நேரத்தை செலவிடுவதால் காலப்போக்கில் இந்த பகுதி சுருங்கி நமக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மொபைல், டிவி உட்பட எதுவாக இருந்தாலும் 3 மணி நேரம் மற்றும் அதற்கு அதிகமான நேரம் பார்க்கும் பட்சத்தில் டிமென்சியா பாதிப்பும் ஏற்படலாம். படிப்படியாக இந்த பிரச்சனையில் இருந்து வெளியேற பாடல் கேட்பது, பிடித்த விஷயத்தை செய்வது, குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது முக்கியம். அதே நேரத்தில் நவீன தொழில்நுட்ப யுகத்தில் கணினி சார்ந்த பணிகளில் இருப்போர் கவனமாகவும் இருக்க வேண்டும்.