G7 Countries Confirm Coal free World: 2035க்குள் நிலக்கரி செயல்பாடுகள் முற்றிலும் நிறுத்தம்; ஜி7 நாடுகள் உறுதி - இங்கிலாந்து அமைச்சர் அறிவிப்பு.!

உலகளவில் காலநிலைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலக்கரி எரிபொருள் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜி7 கூட்டமைப்பு நாடுகள் உறுதிபூண்டுள்ளன.

Coal Mine (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 30, இத்தாலி (Technology News): கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, ஐக்கிய பேரரசு ஆகிய நாடுகள் இணைந்து செயலாற்றும் ஜி7 நாடுகள், உலகளவிலான எதிர்கால திட்டமிடலுடன் செயல்பட்டு வருகின்றன. இந்நாடுகள் மற்றும் அதன் உறுப்பு நாடுகள் அனைத்தும், ஜி7 கூட்டமைப்பின் வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்டு தங்களின் நாட்டில் பிராந்திய அளவிலான எதிர்கால பாதுகாப்பை ஏற்படுத்தி, அதனை உலகளவில் முன்னெடுக்கவும் வழிவகை செய்கிறது.

புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி: இந்நிலையில், 2035 ம் ஆண்டுகளுள் உலகளவில் அனைத்து நிலக்கரி சார்ந்த கூடங்களை மூடுவதற்கு ஜி7 நாடுகள் ஒப்புக்கொண்டு, அதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்தவுள்ளதாக இங்கிலாந்து அமைச்சர் ஆண்ட்ரூ போவி உறுதிபட தெரிவித்து இருக்கிறார். இவை எதிர்காலத்தில் பிற நாடுகளால் பின்பற்ற ஏதுவான சூழலை உண்டாகும் எனவும் நம்பப்படுகிறது. சுற்றுசூழலுக்கு மிகவும் கேடான விஷயத்தை ஏற்படுத்தும் புதைபடிவ எரிபொருளாக நிலக்கரி கவனிக்கப்படுகிறது. Cops Died: காவலர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிசூடு; அமெரிக்காவில் 3 காவலர்கள் பரிதாப பலி.! 

உலகத்தின் எதிர்காலத்திற்காக உறுதிபூண்டுள்ள நாடுகள்: இவ்வாறான நிலக்கரியின் பயன்பாடுகளை உளளவில் அகற்றத் தேவையான பேச்சுவார்த்தை நடைபெற்று, அதன் விளைவாக தற்போது மேற்கூறிய முடிவும் எட்டப்பட்டுள்ளது. ஜப்பான் கடந்த 2023ம் ஆண்டில் 32% மின்சாரத்தை நிலக்கரியில் இருந்து பெற்றுள்ளது. நிலக்கரியின் பயன்பாடுகளை படிப்படியாக குறைந்து, மாற்று மின்னுற்பத்தியில் ஈடுபட்ட பின்னர், 2035 க்குள் நிலக்கரி பயன்பாடு முற்றிலும் ஜி7 நாடுகளில் இருந்து அகற்ற உறுதி எடுக்கப்பட்டுள்ளது.