ஏப்ரல் 30, கரோலினா (World News): அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா, சார்லெட், கால்வே டிரைவ் பகுதியில் காவல்துறை அதிகாரிகள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில், அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில், காவல்துறை உயர் அதிகாரி உட்பட 3 காவல் துறையினர் பரிதாபமாக உயிரிழந்தனர். முதலில் துப்பாக்கிசூடு சம்பவத்தில் காவல் துறையினர் உயிரிழந்த செய்தியை கூற மறுத்துவிட்ட காவல் துறையினர், பின் ஊடகங்களுக்கு அதனை உள்ளூர் நேரப்படி மாலை 05:40 மணியளவில் உறுதி செய்தனர். Rasavathi Trailer: “பயமில்லாம நடிக்கிறது தான் வீரம்னு சொல்லி கொடுத்திருக்காங்களா?" ரசவாதி படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..! 

துயரமான நிகழ்வுக்கு மேயர் இரங்கல்: அதிரடிப்படை அதிகாரிகள் நிகழ்விடத்தில் விசாரணைக்காக இருந்தபோது, நடந்த இந்த தாக்குதலில் ஒருசில அதிகாரிகளும் காயம் அடைந்தனர். இந்த துப்பாக்கிசூடு நடத்திய சந்தேகத்திற்குரிய நபர்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இத்துயர சம்பவம் குறித்து தகவல் அறிந்த அந்நகர மேயர் வி லைன்ஸ், தனது இரங்கலையும் பதிவு செய்துள்ளார். அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.