World Bee Day 2024: "நாங்க சுத்தலைன்னா பூமி சுத்தாது" உலக தேனீ தினம்..!
உலகம் முழுவதும் இன்று தேனீ தினம் கொண்டாடப்படுகிறது.
மே 20, சென்னை (Chennai): தேனீக்களின் வாழ்க்கை முடிகிறதெனில் உங்களுக்கான அழிவும் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை மறவாதீர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கையை கருத்தில் கொண்டே மே 20 ஆம் தேதியான இன்று தேனீக்கள் தினத்தை (World Bee Day) உலகம் முழுவதும் அனுசரிக்கின்றனர்.
தேன்கூடு: தேனீக்கள் வாழும் தேன் கூட்டில் குறைந்தபட்சமாக 80 ஆயிரம் தேனீக்கள் இருக்கும். மேலும் ஒரே ஒரு ராணி தேனீ மட்டும் இருக்கும். 250க்கும் அதிகமான ஆண் தேனீக்கள் இருக்கும். ராணி தேனீ இரண்டிலிருந்து ஏழு வருடம் வரை உயிருடன் இருக்கும். ஆண் தேனீக்கள் 90 நாட்கள் வரையிலும் வேலைக்கார தேனீக்களோ அதிகபட்சமாக 42 நாட்கள் வரை மட்டுமே உயிருடன் இருக்கும். தேன் கூட்டில் உள்ள தேனீக்கள் அனைத்துமே ராணி தேனீ கட்டுப்பாட்டில் தான் இருக்கும். ராணி தேனீயின் வேலையே அவற்றினை வேலை வாங்குவதுதான். Car rally in UK Support PM Modi: பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்து இங்கிலாந்தில் பிரம்மாண்ட கார் பேரணி; அசத்திய பாஜக ஆதரவாளர்கள்.!
அழிந்து வரும் தேனீகள்: உலகம் முழுவதும் தற்போது அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் தேனீயும் சேர்ந்து விட்டது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்து விட்டன. தேனிகளின் அழிவினால் உலக அளவில் பல நாடுகளில் விவசாய உற்பத்தி குறைந்துவிட்டது.