Guru Purnima: அறிவொளியை தந்து வாழ்க்கையை உயர்த்திய குருக்களை கௌரவிக்கும் குரு பூர்ணிமா; வாழ்த்து, நல்லநேரம் இதோ.!
ஆடி பௌர்ணமியில் கொண்டாடப்படும் குரு பூர்ணிமா, குருக்களுக்கான மரியாதை வழங்க ஓர் சிறந்த வாய்ப்பு ஆகும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய குருவை எண்ணி போற்றுங்கள்.
ஜூலை 18, சென்னை (Chennai): Guru Purnima Wishes WhatsApp Status Messages, HD Wallpapers, Quotes and SMS To Share on Guru Purnima 2024: ஒவ்வொரு ஆசிரியருக்கும் - சீடருக்குமான உறவை கௌரவிக்கும் விதமாக குரு பூர்ணிமா (Guru Purnima 2024) கொண்டாடப்படுகிறது. இந்து, பௌத்தம் ஆகிய மாதங்களில் பெருவாரியாக சிறப்பிக்கப்படும் குரு பூர்ணிமா, மக்கள் தங்களின் ஆசிரியர்கள், குருக்கள் மற்றும் வழிகாட்டி போன்ற சான்றோரை வணங்கும் உன்னத நாளாக கவனிக்கப்படுகிறது.
ஞான பூர்ணிமா:
குழந்தைப்பருவம் முதலாக வளரும் இளம் பருவம் வரையில் தங்களை நல்வழிப்படுத்தி வாழ்க்கைக்கு அச்சாரமிட்டு, அறிவொளிக்கு உதவிய குருக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக சிறப்பிக்கப்படும் குரு பூர்ணிமா, வியாச பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய வரலாற்று காவியங்களில் தலைசிறந்த முனிவர் என குறிப்பிடப்பட்டுள்ள, மகாபாரதத்தின் ஆசிரியர் வேதவியாஸரின் பிறந்தநாள் விழா குரு பூர்ணிமாவாக கொண்டாடப்படுகிறது. இதனை ஞான பூர்ணிமா என்றும் அழைக்கின்றனர். Thulasi Medicinal Benefits: துளசி செடியில் உள்ள மருத்துவ பயன்கள் என்னென்ன..?
முதல் சீடரை உருவாக்கிய மகாவீரர்:
அறிவு மற்றும் போதனையாக போற்றப்படும் பண்டிகையாகவும் குரு பூர்ணிமா இருக்கிறது. இந்துக்கள், புத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள் போன்றோரும் குரு பூர்ணிமாவை சிறப்பிக்கின்றனர். சீக்கியர்கள் தங்களின் பத்து ஆன்மீக குருமார்களை கௌரவிக்க இந்நாளை கொண்டாடுகின்றனர். சமணர்கள் இந்நாளை "ட்ரீனோக் குரு பூர்ணிமா" என்று வருணிக்கின்றனர். அதாவது, மகாவீரர் தனது முதல் சீடரை இன்று உருவாக்கியதாக அவர்கள் நம்புகின்றனர்.
குரு பூர்ணிமா நல்ல நேரம்:
இந்துக்கள் நாள்கட்டியின்படி, குருபூர்ணிமா ஜூலை 21, 2024 (ஆடி 05, பௌர்ணமி நாள்) ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பிக்கப்படுகிறது. ஜூலை 21 அன்று காலை 07:45 முதல் 08:45 வரையிலும், மாலை 03:15 முதல் 04:15 வரையிலும் நல்ல நேரமாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் சிஸ்யர்கள் தங்களின் குருவுக்கு வேண்டிய மரியாதை செய்யலாம், உங்களின் வழிகாட்டியை வணங்கி ஆசிபெறலாம். Paneer Halwa Recipe: தித்திக்கும் சுவையில் பன்னீர் அல்வா செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
ஆசிய நாடுகளில் குரு பூர்ணிமா:
'குர்' என்ற இருள், இருளுக்கு எதிரான 'ரு' குரு ஆகியது. அதாவது, குரு நம்மை அறியாமை என்ற இருளில் இருந்து விடுவித்து, அறிவு மற்றும் விழிப்புணர்வை வழங்குவார். வடமாநிலங்களில் இப்பண்டிகையை விரதம் இருந்தும் சிறப்பிக்கும் பக்தர்கள் இருக்கின்றனர். குரு பூர்ணிமா நாம் நமக்கு போதனைகளை வழங்கிய குருக்கள், சான்றோர்களின் நல்வழிகளை நினைவுகூர்ந்து செயல்படுவதே ஆகும். இந்தியா மட்டுமல்லாது நேபாளம், தாய்லாந்து, இலங்கை, மலேஷியா போன்ற நாடுகளிலும் குரு பூர்ணிமா அவரவர் சடங்கு முறைகளால் சிறப்பிக்கப்படுகிறது.
லேட்டஸ்ட்லி வாழ்த்துகிறது:
இந்நாளில் மகிரிஷி வியாஸ், ஸ்ரீ மதவாச்சார்யா, ஆதி சங்கரர், ஸ்ரீ ராமானுஜ ஆச்சார்யா ஆகியோரையும் வணங்கி போற்றுகின்றனர். குருக்களின் ஆசியை பெற கோவிகள் மற்றும் வீடுகளில் சிறப்பு பூஜை போன்றவையும் நடைபெறும். 2024ம் ஆண்டுக்கான குரு பூர்ணிமாவில், உங்களின் அன்புக்குரிய குருக்களுக்கு தற்போதைய தொழில்நுட்பத்துக்கு ஏற்ப வாட்சப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் உங்களின் வாழ்த்துச்செய்தியை பகிருங்கள். குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் இத்துடன் எமது லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) சார்பில் பிரத்தியேகமான புகைப்படத்துடன் இணைக்கப்ட்டுள்ளது. அவை பின்வருமாறு உங்களின் பார்வைக்கு வழங்கப்படுகிறது. Mint Water Benefits: புதினா தண்ணீர் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..? விவரம் உள்ளே..!
1. அன்புள்ள குருவின் எல்லையில்லாத கருணை எப்போதும் உங்களின் மீதும், குடும்பத்தின் மீதும் இருக்கட்டும்.. இனிய குரு பூர்ணிமா வாழ்த்துகள்!
2. குருவின் ஆசீர்வாதம் எங்களின் பலத்தை உணர்த்தி இலக்குகளை அடைய உதவட்டும், இனிய குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!
3. சத்தியத்தின் வழியை காண்பித்து, வாழ்க்கையை ஞானத்தால் ஒளிரச் செய்த குருவே, இந்த புனித சந்தர்ப்பத்தில் உங்களுக்கு நன்றியை தெரிவித்து ஆசிர்வாதம் வேண்டுகிறோம்., இனிய குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!
4. உண்மை, ஞானத்தை கண்டறியும் இறுதி வழியான குருவே, வாழ்க்கையில் அறிவொளி, மகிழ்ச்சியை போதனையாக வழங்க இனிய குரு பூர்ணிமா வாழ்த்துகள்!. Aadi Month Festival: புனிதமான ஆடி மாதத்தில் என்னென்ன செய்யலாம்..? என்னென்ன செய்யக்கூடாது..? முழு விவரம் இதோ..!
5. கப்பல்களை வழிநடத்தும் கலங்கரை விளக்கம்போல, குருவே எம் மனதை தெளிவுபடுத்தியதற்கு நன்றி.. குரு பூர்ணிமா நல்வாழ்துகள்!
6. மனிதனை நல்வழிப்படுத்திய குருவே, உங்களின் பாதையில் நாங்களும் அணிவகுக்கிறோம்., இனிய குரு பூர்ணிமா நல்வாழ்த்துகள்!
7. என் வாழ்க்கையை ஊக்குவித்து, சரியான திசையில் அதனை முன்னெடுத்துச்செல்ல உதவிய அன்பு ஆசிரியரே, உங்களுக்கு குரு பூர்ணிமா நல்வாழ்த்துகள்!
மொழி, இனம், மதத்தை கடந்து ஒவ்வொருவரும் தங்களின் குருவுக்கு உரிய மரியாதை செலுத்தி, நம் வாழ்க்கையில் நாம் உயர்வதற்காக நமது இளமை காலத்தில் உறுதுணையாக இருந்த அவர்களை நினைத்து போற்ற எமது லேட்டஸ்ட்லி (LatestLY) இதழ் சார்பில் இனிய குரு பூர்ணிமா நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)