ஜூலை 17, சென்னை (Health Tips): துளசி செடி நோய் வருமுன் காத்து, வந்த நோயை விரட்டி, எதிர்காலத்திலும் நோய் வராத அளவுக்கு எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது. அதனால் தான் இதனை ‘மூலிகைகளின் அரசி’ என்கிறார்கள். துளசியிலுள்ள (Holy Basil) மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களால் வளிமண்டலத்திலுள்ள புகைக் கிருமிகள் போன்ற மாசுக்கள் சுத்திகரிக்கப்படுகின்றன. அதனால் சுத்தமான காற்று கிடைக்கின்றது. துளசி, அதிகம் உள்ள இடங்களில் கொசுக்கள் வராது. துளசி வீட்டு தோட்டத்தில் வைத்திருப்போம். பலர் அடுக்குமாடி குடியிருப்புகளில் பால்கனி அருகே பூச்செட்டியில் வைத்திருப்பர். அந்தவகையில், துளசி செடியில் (Thulasi) உள்ள பயன்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
மன அழுத்தத்தை போக்கும்: மன அழுத்தம் அல்லது கவலையை உணரும்போது ஒரு கப் துளசி டீயை பருகினால், புத்துணர்ச்சி கிடைக்கும்.
செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது: துளசி (Tulsi) செடி கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதனால் அது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகின்றது. Boy Dies By Dog Bite: தெருநாய் கடித்து 7 வயது சிறுவன் படுகாயம்.. 2 வயது சிறுவன் உயிரிழப்பு..! பதைபதைக்க வைக்கும் வீடியோ வைரல்..!
உடல் எடை குறைப்பு: இது ஜீரண உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம், உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி உடல் எடையை குறைகிறது.
நீரிழிவு நோய் கட்டுப்படுத்தல்: துளசி தேநீர், டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகின்றது. இந்த மூலிகை டீ நீரழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு: துளசியில் துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி ஆகிய இரண்டு கூறுகள் உள்ளன. அவை தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகின்றன. துளசி இலைகள் அல்லது துளசி டீயை தினமும் உட்கொள்வது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
பல் மற்றும் வாய் ஆரோக்கியம்: துளசியில் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. அவை வாயில் உள்ள பாக்டீரியா மற்றும் கிருமிகளை எதிர்த்துப் போராடுகின்றது.
தோல் மற்றும் முடி நன்மைகள்: இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிரம்பியுள்ளன. இது வயது முதிர்வு அறிகுறிகளை எதிர்த்து போராடுகின்றது. மேலும், உச்சந்தலையில் ஏற்படும் அரிப்புகளை குறைப்பதோடு, முடி உதிர்தலையும் கட்டுப்படுத்துகின்றது.
சரும பாதுகாப்பு: துளசி பேஸ்ட் சருமத்தில் ஏற்படும் கறைகள் மற்றும் முகப்பருவை நீக்கும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் முகச்சுறுக்கங்களை போக்கி சரும பிரச்சனை வராமல் தடுக்கும்.