Mint Water (Photo Credit: YouTube)

ஜூலை 15, சென்னை (Health Tips): புதினா தண்ணீர் வெப்பத்தை தணிக்க உதவும் ஓர் ஆரோக்கியமான பானம் மட்டுமின்றி உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளித்து புத்துணர்ச்சியையும் கொடுக்கின்றது. புதினாவை (Mint) இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து காலை எழுந்தவுடன் வடிகட்டி வெறும் வயிற்றில் பருகுவதே புதினா நீர் (Mint Water) ஆகும். இது உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுப்பதோடு செரிமானத்துக்கு பெரிதும் உதவுகிறது. அப்படிப்பட்ட புதினா நீரில் உள்ள பயன்களை பற்றி இதில் பார்ப்போம்.

புதினா தண்ணீரில் உள்ள பயன்கள்:

செரிமான கோளாறுகள் இருப்பவர்கள், உணவில் புதினா நீரை சேர்த்து பருகி வர செரிமான பிரச்சனைகள் சீராகும். வாயு, வயிறு உப்புசம் ஆகியவற்றை சரிசெய்கிறது. இது ஹார்மோன் அளவை பராமரிக்கவும், பிசிஓஎஸ்க்கு சிகிச்சை அளிக்க உதவுகின்றது.

உடல் நல்ல முறையில் இயங்குவதற்கு நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு புதினா தண்ணீர் உதவுகின்றது. இது சரிவிகித உணவுக்கு தனிச்சுவையையும் கொடுக்கின்றது. 3 Dead Bodies in Home: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் எரிந்த நிலையில் பிணமாக மீட்பு.. கடலூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆயுர்வேத மருந்துகளில் மனஅழுத்தத்தை குறைக்க உதவும் மருந்துகளில் புதினா மனஅமைதியுடன் வைத்துக்கொள்வதற்கு உதவும் ஒரு மருந்தாகும். இது உடலை குளிர்வித்து, மனதை அமைதியாக்கும் திறன் கொண்டதாக விளங்குகிறது.

உணவில் அடிக்கடி புதினா தண்ணீரை சேர்த்துக்கொண்டால் உடல் எடை குறையும். இதில் கலோரிகள் குறைவு. மேலும், புதினா நீரை பருகும்போது வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும். இதனால், அதிகளவு சாப்பிடுவது கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே, உடல் எடை குறைய உதவுகின்றது.

புதினாவில், வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் அதிகம் உள்ளது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

இதில் வைட்டமின் ஏ மற்றும் சாலிசிலிக் அமிலம் நிறைய உள்ளதால் இது சருமத்தை காக்க உதவுகிறது. புதினா தண்ணீரில், பூஞ்சைக்கு எதிரான குணங்கள் மற்றும் பாக்டீரியாவுக்கு எதிரான குணங்கள் இருப்பதால் முகத்தில் ஏற்படும் வீக்கம் மற்றும் முகப்பருக்களை குறைக்க பயன்படுகிறது. புதினா தண்ணீரை பருகும்போது, உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுகிறது. எனவே. சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கிறது.