Happy Ramadan 2024: பிறை இருள் வெளிச்சத்தின் முதல் தொடக்கம்.. இனிய ரமலான் திருநாள் வாழ்த்துகள்..!
ஈகையின் வழி அன்பை வலியுறுத்தும் புனித ரமலான் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சொந்தங்களுக்கு இனிய ரமலான் வாழ்த்துகள்!
ஏப்ரல் 11, சென்னை (Chennai): இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ரமலான் (Ramadan) உள்ளது. இஸ்லாமிய காலண்டரின் 9வது மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை கொண்டாடுப்படுவதற்கு முன்பு இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். ஒவ்வொரு பகுதியிலும் பிறை தெரிவதற்கு ஏற்ப ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி தமிழ்நாட்டில் இன்று பிறை தென்பட்டதால் இன்று ரமலான் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது. Viral Video: திடீரென வீட்டிற்குள் புகுந்த தேனீக்கள்... விரட்டியடித்த மாமனிதர்..!
மேலும் உங்களுக்காகவே இன்றைய நாளை சிறப்பிக்க ரமலான் கவிதைகளைப் பகிர்ந்துள்ளோம். இன்றைய நாளுக்கான வாழ்த்து செய்திகள் என்பது பல இருக்கின்றன. அவற்றுள் சில:
- ஈகைப் பெருவிழாவாம் ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்!
- ஈகைத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல் வாழ்த்துகள். இந்த ரமலான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பும், அமைதியும், ஆசீர்வாதமும் வழங்கிடட்டும்.
- அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.
- அனைவருக்கும் இந்த தினம், அமைதியையும், மகிழ்ச்சியையும், ஆசீர்வாதங்களையும் தந்து, அனைவர் வாழ்விலும் அன்பும், நிம்மதியும் நிலைக்கவும், நல்லிணக்கம் மற்றும் செழிப்பை அளிக்க கூடிய நன்னாளாக அமையவும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.
- இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துகள்.!! சகோதரத்துவம், மனிதநேயம் பெருகிட இந்நாளில் உறுதியேற்போம்.!!