Diwali Celebration (Photo Credit : Pixabay)

அக்டோபர் 18, சென்னை (Festival News): இந்தியாவில் ஆண்டுதோறும் சிறப்பிக்கப்படும் தீபாவளி பண்டிகை (Diwali Festival) இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக திகழ்கிறது. ஒளி மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக கருதப்படும் இப்பண்டிகை இருளை அகற்றி தீமையை வெல்வதை உணர்த்துகிறது. தீபாவளி என்பது 'தீபங்களின் வரிசை' என பொருள் தருகிறது. தீமை எனும் இருளை நீக்கி, நன்மை எனும் ஒளியை ஏற்ற வேண்டும் என்பதே தீபாவளியின் உண்மையான பொருளாக கருதப்படுகிறது. தீபாவளி நாளில் ஏழை, பணக்காரர் என வேறுபாடு இல்லாமல் மக்கள் அனைவரும் புத்தாடைகள் அணிந்து, வீட்டை அலங்கரித்து, தீபமேற்றி, இனிப்புகள் பகிர்ந்து, பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கமாகும். Diwali 2025: தீபாவளி 2025 எப்போது? நல்ல நேரம், வழிபாடு முறை.. செல்வம் பெருகும் லட்சுமி-குபேர பூஜைக்கு சிறந்த நேரம்.!

தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் (Deepawali 2025):

இந்நன்னாளில் எண்ணெய் தேய்த்து நீராடி தங்கள் மனதில் இருக்கும் இருளை நீக்க வேண்டும். வெள்ளி, சனிக்கிழமை முதல் தீபாவளி (Deepawali 2025) கொண்டாட்டங்கள் களைகட்டும் என எதிர்பார்க்கபடுகிறது. சென்னை, பெங்களூர் போன்ற வெளியூர்களில் இருந்து பணியாற்றி வரும் பலரும், தீபஒளி (Diwali) பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் வருகின்றனர். விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாட பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழிகாட்டுதலும் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசுகளை ஏற்படுத்தாத பட்டாசுகளை அனுமதிக்கப்பட்ட நேரங்களில் உரிய இடங்களில் வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தீபாவளியில் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம். Happy Diwali Wishes Tamil: தீபாவளி 2025 சிறப்பு வாழ்த்து செய்திகள்.. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.!

தீபாவளியில் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்:

  • தீபாவளி நன்னாளில் வீட்டை சுத்தம் செய்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.
  • அதிகாலை எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். எதிர்மறை ஆற்றல்கள் நீங்க உப்பு மற்றும் மஞ்சள், ரோஜா இதழ்களை குளிக்கும் நேரில் சேர்க்கலாம்.
  • புத்தாடை அணிந்து வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசி பெறுதல் மகாலட்சுமியின் அருளை பெற்று தரும்.
  • தீபாவளியின் மாலை லக்ஷ்மி, விநாயகர், குபேர பூஜை வழிபாடு செய்வது செல்வத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளித் தரும்.
  • பூஜை செய்யும் இடம் சுத்தமாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும்.
  • தீமை எனும் இருளை நீக்க, நன்மை எனும் ஒளியை ஏற்றுதல் வேண்டும். மாலை நேரத்தில் வீடு முழுவதும் தீபங்கள் ஏற்றி இருள் நெருங்காமல் பார்த்துக் கொள்ளுதல் அவசியம்.
  • தீபாவளி நன்னாளில் கோபம், மனக்கசப்பு, வெறுப்பு உணர்வை ஒதுக்கி வைக்க வேண்டும்.
  • மனதை அமைதிப்படுத்த தியானம் செய்து கடவுளை மனதார நினைத்து எடுத்த காரியம் வெற்றி பெற வேண்டலாம்.
  • பூஜைக்கு பின் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது நல்லது.
  • குடும்பத்தினருடன் அமர்ந்து ஒற்றுமை, அமைதி மற்றும் அன்பு நிறைந்த சூழலை உருவாக்கி மகிழ்ச்சியாக தீபாவளியை சிறப்பிக்கலாம்.
  • உறவுகளுடன் இனிப்புகள் பரிமாறி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுங்கள்.

தீபாவளியில் செய்யக்கூடாதவை:

  • தீபாவளியன்று காலை தாமதமாக எழுவதை தவிர்க்க வேண்டும்.
  • வீட்டை அசுத்தமாக வைக்காமல் சுத்தப்படுத்துதல் அவசியம்.
  • பூஜை நேரத்தில் கோபப்படுவது, வாக்குவாதங்கள் செய்வது, எதிர்மறை எண்ணங்களுடன் இருப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
  • 2025 தீபாவளியன்று அமாவாசையும் சேர்ந்து வருவதால் அசைவ உணவை தவிர்ப்பது நல்லது.
  • தீபாவளியில் பட்டாசு மட்டும் வெடித்துவிட்டு தீபங்கள் ஏற்றாமல் இருப்பது நல்லதல்ல.
  • ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுதல் அவசியம்.
  • குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிக்க கூடாது.
  • தீபாவளி நாளில் தானம் செய்வது, பிறருக்கு உதவுவது புண்ணியம் தரும். தானம் கேட்பவர்களை புறக்கணிக்க கூடாது.
  • தீப ஒளி நாளில் வீட்டை இருளில் மூழ்கடிக்காமல் தீபங்கள் ஏற்றி வைப்பது அவசியம்.