Ginger Juice: இஞ்சி ஜூஸ் குடிக்கலாமா? அதனை எப்படி செய்வது?.!
இஞ்சி ஜூஸை எப்படி செய்வது என்பதையும், அதனை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதையும் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஜனவரி 03, சென்னை (Chennai): தினமும் சமையலில் பயன்படுத்தும் இஞ்சிக்கு அதிக மருத்துவ குணங்கள் உள்ளது. சுவைக்காகவும் மணத்திற்காகவும் பயன்படுத்தும் இஞ்சி, செரிமான மண்டலத்தையும் பராமரித்துக் கொள்வதுடன் உடலில் பல நன்மைகளை செய்கிறது. இஞ்சியை தனியாக ஜூஸ் போட்டு பருகினால் வயிற்று கோளாறுகள், குமட்டல், வாந்தி, உடல் பருமன், அல்சர் போன்ற பிரச்சினைகளைக் குணப்படுத்துகிறது.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது. இஞ்சியில் இருக்கும் ஆன்டிடயாபடிக் பண்பு இரத்தத்தில் இருக்கும் அதிக சர்க்கரை அளவைக் குறைக்கிறது. உடலில் அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் மாரடைப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது. Miracle Coconut Tree: 3 கிளைகள் கொண்ட அதிசய தென்னை மரம்... வைரலாகும் அதிசய காட்சி..!
இஞ்சியை நேரடியாக ஜூஸாக பருக்கும் போது இஞ்சியில் இருக்கும் கார உட்பொருட்களான ஜின்ஜெரான்கள், ஜின்ஜெரால்கள், ஷோகோல்கள் போன்றவை புற்றுநோய் செல்களை அழிக்கும் திறனுடையவை. வாய் முதல் வயிறு வரை செரிமான மற்றும் சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது. பசியின்னை, ஜீரண பிரச்சனை, வயிற்றுப் போக்கு, செஞ்செரிச்சல், மூச்சுப் பிரச்சனை, ஆஸ்துமா போன்றவைகளுக்கு உடனடி தீர்வை வழங்குகிறது.
இஞ்சி ஜூஸ், இது போன்ற பிரச்சனைகளுக்கு கட்டாயம் தீர்வளிக்கு மருந்தாகும். இஞ்சி ஜூஸை அடிக்கடி எடுத்துக் கொள்பவர்களுக்கு இருக்கும் நாட்பட்ட முதுகு வலி, மூட்டு வலி, சதைவலிகள் குணமாகும். மேலும் இஞ்சியில் உள்ள பீனால், ப்ளேவேனாய்டுகள், முழு நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது. மூளையின் செயல்பாடுகளை அதிகரித்து உடலை எப்போதும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பகாவும் இருக்க உதவுகிறது. ஆனால் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், அறுவை சிகிச்சை செய்யும் நபர், இரத்தக் கோளாறு உள்ளவர்கள் இஞ்சி ஜூஸை எடுத்துக்கொள்ள கூடாது. Kawasaki Eliminator Launched: கவாஸாகி எலிமினேட்டர் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?.!
இஞ்சி ஜூஸ் செய்யும் முறை: இஞ்சி ஜூஸை செய்வதற்கு முதலில் சுத்தமான நல்ல காரத்தன்மை வாசனை வரும் இஞ்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இஞ்சியின் ஒரு துண்டை தோல் சீவி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். பின் சாறை வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் அரை எலுமிச்சம் பழத்தின் சாரை பிழிந்து கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு ஸ்பூன் தேன் அல்லது வெல்லம், சில புதினா இலைகளை சேர்த்து அருந்தலாம். இந்த ஜூஸை தினமும் காலை எழுந்ததும் 3 ஸ்பூன்கள் அருந்தலாம். தினமும் எடுத்துக் கொள்ள முடியாதவர்கள் 3 நாட்களுக்கு ஒரு முறை அருந்தாலும்.