Miracle Coconut Tree (Photo Credit: @backiya28 X)

ஜனவரி 03, கன்னியாகுமரி (Kanniyakumari): பொது­வாக தென்னை மரங்­கள் நெடு­நெடு வென்று உயர்ந்து வள­ரும். இப்­போது, நமது கைக­ளால் பறிக்­கும் அள­வுக்கு குட்டை தென்னை மரங்­க­ளி­லும் தேங்­காய்கள் காய்த்­துக் குலுங்­கு­கின்­றன. தென்னை மரத்துக்கு கிளைகள் கிடையாது என பாட புத்தகங்களில் படித்திருக்கிறோம்  ஆனால் கன்னியாகுமரி மாவட்டம் சிதறால் ஜங்ஷனில் இருந்து வெள்ளாங்கோடு அரசு ஆரம்பப் பள்ளி செல்லும் சாலையில் 3 கிளைகளுடன் நன்கு வளர்ந்த தென்னை மரம் காணப்படுகிறது. Kawasaki Eliminator Launched: கவாஸாகி எலிமினேட்டர் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?.!

3 கிளைகள் கொண்ட இந்த அதிசய தென்னை மரத்தை, அந்த சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். அது மட்டுமன்றி அந்த மரத்தை சிலர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அது தற்போது மிக வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.