Impact of Fake Alcohol: சாராயம் vs கள்ளச் சாராயம்.. கள்ளச்சாராயம் குடித்து உயிர்பலி ஆக காரணம் என்ன?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த வாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி கள்ளச்சாராய உயிர்பலிகள்தான்.

Liquor (Photo Credit: Pixabay)

ஜூன் 20, புதுடெல்லி (New Delhi): தற்போது தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் என்றால் அது கள்ளச்சாராயம்தான். இதுவரை கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 72 பேர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர், 33 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருவதாக மருத்துவமனையில் இருந்து தகவல்கள் வெளியாகிக் கொண்டே வருகின்றன.

சாராயம் vs கள்ளச் சாராயம்: பொதுவாக டாஸ்மாக்கில் விநியோகிக்கப்படும் சாராயத்தினை குடிக்கும் பொழுது உயிர் பலிகள் நடைபெறுவதில்லை. ஆனால் கள்ள சாராயம் குடிப்பதனால் மட்டும் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆலைகளில் தயாரிக்கப்படும் மதுபானமாக இருந்தாலும் கள்ள சாராயமாக இருந்தாலும் சரி இவை இரண்டிற்கும் ஒரே தயாரிப்பு முறைதான். ஆனால் ஆலைகளில் மதுவை தர நிர்ணயம் செய்ய அதற்கென படித்தவர்கள் அங்கு இருப்பார்கள். ஆனால் இந்த கள்ளச்சாராயத்தினை, காய்ச்சுபவரே தர நிர்ணயம் செய்வார்.

குறிப்பாக ஆலைகளில் காய்ச்சப்படும் மதுக்களில் மெத்தனால் அளவு துளி கூட இருக்காது. அதே நேரம் அதை ரெக்டிஃபைட் ஸ்பிரிட்டு இருக்கும். இதனைக் காய்ச்சும் போதே மெத்தனால் உருவாகும். ஆலைகளில் காய்ச்சும் பொழுது இந்த ரெக்டிஃபைடுடன் கலந்திருக்கும் மெத்தனாலை நீக்கிவிடுவார்கள். ஆனால் கள்ளச்சாராயம் காய்ச்சிபவர்களோ அதனை சிறிதும் கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள் என விபரம் அறிந்தவர்களால் கூறப்படுகிறது. UGC-NET June 2024 Examination Cancelled: வினாத்தாள் கசிவா.? தேர்வு குளறுபடி.. யுஜிசி நெட் தேர்வு ரத்து..!

கள்ளச்சாராயம் குடித்து உயிர்பலி ஆக காரணம்: இந்த மெத்தனால் ஒரு நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள். அதனை உட்கொண்டால் உடனடியாக மரணம் ஏற்படும். ஒரு தனி நபர் உடலில் மெத்தனால் இரண்டு மில்லி கிராம் சேரும்பொழுது வயிற்றுப் போக்கு போன்ற சிறியதளவு பாதிப்பு நேரிடலாம். ஆனால் பத்து மில்லியை தாண்டும் பொழுது பார்வை இழக்க நேரிடும். அதுவே 30 மில்லியை தாண்டும் பொழுது மரணம் தான்.

அதே நேரம் வெல்லம், புளிச்ச தாவர தண்ணீர், யீஸ்ட் , ஆரஞ்ச் தோல், பலவகை பழங்கள், நீர், Methanol மிதேனால் கெமிகல், இவைகளை மட்டும் முறையாக கலந்தால் பாதிக்காது என்றும், ஆனால் கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் அதிக போதைக்காக பேட்டரிஆசிட், செத்த எலிகள், பல்லிகளை மற்றும் தகாத பொருட்களை சேர்த்து விடுவர், இது உயிருக்கு ஆபத்தாக்கி விடும் என்றும் கூறப்படுகிறது.