ஜூன் 20, புதுடெல்லி (New Delhi): உதவி பேராசிரியர் பணியிடத்திற்கான தகுதி தேர்வாகவும், பிஎச்.டி படிப்பிற்கான தகுதி தேர்வாகவும் நடைபெறும் யுஜிசி நெட் தேர்வு (UGC-NET June 2024 Examination), ஜூன் 18 ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் யுஜிசி நெட் தேர்வு 83 பாடங்களுக்கு ஓஎம்ஆர் முறைப்படி நடைபெற்றது. சுமார் 1,205 தேர்வு மையங்களில் 9,08,580 பேர் தேர்வெழுதினர். Foods For A Healthy Sex Life: உடலுறவும் உணவும்.. ஆரோக்கியமான உடலுறவிற்கு ஏற்ற உணவுகள் என்னென்ன.? விபரம் உள்ளே.!
கடந்த சில ஆண்டுகளாக கணினி வழியாக நடைபெற்ற நெட் தேர்வு இம்முறை ஓஎம்ஆர் சீட் முறையில் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், நெட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தேசிய சைபர் குற்றப் பிரிவிலிருந்து தகவல் வந்திருப்பதாகவும், இதனால் மத்திய கல்வி அமைச்சகமும், மத்திய அரசும் இணைந்து இந்தநெட் தேர்வை ரத்து செய்வது என முடிவு செய்திருப்பதாகவும் இந்த முறைகேடுகள் குறித்த விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுவதாகவும் புதிய தேர்வு தேதி குறித்த அறிவிப்பு தனியாக வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.