IPL Auction 2025 Live

Laser Eye Surgery: கண் பார்வையில் பிரச்சனையா? லேசர் கண் சிகிச்சையால் பார்வைத்திறன் மேம்பாடு; விபரம் இதோ.!

எந்த வயதிலும் கண்ணாடி அணிவதில் விருப்பமில்லை என்பவர்களுக்கு அதற்கான மாற்று வழிகள் இன்று நிறைய உள்ளன.

LASIK (Photo Credit: Pixabay)

ஜூலை 18, புதுடெல்லி (New Delhi): நம் உடலில் அழகான மற்றும் மதிப்பு வாய்ந்த உறுப்பு கண் தான். அது நம் எல்லாருக்கும் ஒரே மாதிரியான திறனையும் வடிவத்தையும் கொண்டிருக்காது. சிறுவயதிலிருந்தே ஒவ்வொருவரின் பார்வை திறனும் அவர்களின் வடிவத்திற்கு ஏற்றார்போல் மாறுபடும். பொதுப்பார்வை நோய்களான கிட்டத்துபார்வை (மையோபியா), தூரத்துப் பார்வை (ஹைபரோபியா), பார்வை மங்குதல், பிரெஸ்பியோபியா போன்ற நோய்களுக்கு லேசர் சிகிச்சை முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கண்: விழியானது ஏறத்தாழ 2.3 செ.மீ விட்டம் கொண்ட கோள வடிவ அமைப்புடையது. கண்ணில் உள்ள 'ஸ்கிளிரா' என்னும் வலிமையான சவ்வினால் கண்ணின் உள்ளுறுப்புகள் பாதுகாக்கப்படுகின்றன. விழிக்கோளத்தின் முன் ஒளி புகும் படலம் கார்னியா ஆகும். இதில் விழும் ஒளிக்கதிர்கள் தான் ஒளிவிலகல் அடைந்து விழி லென்சின் மீது குவிக்கப்படும். மனிதர்களின் கண்நிற வேறுபாட்டிற்கு காரணம் ஐரிஸ். இதன் மையப்பகுதி கண்பாவையாகும். இதன் வழியாகவே ஒளிக்கதிர் செல்லும். கண்ணின் மிக முக்கியமான பகுதியானது லென்ஸ் ஆகும். இது குவிலென்ஸாக செயல்படுகிறது. இதனால் ஒளிக்கதிர்கள், ஒளித்திரையில் (ரெடினா) தலைகீழாக விழும். பார்வை நரம்புகள் மூலம் பிம்பமானது மூளைக்கு எடுத்துச் செல்கிறது. TN Weather Update: மதியம் 1 மணிவரை 26 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

பொதுவான கண் குறைபாடுகள்:

லேசர் அறுவை சிகிச்சை முறை: லேசர் சிகிச்சை முறை என்பது ஒரு சிறிய ஒளிக்கதிரை கண்ணில் செலுத்தி ஒளி விலகலை சரிசெய்யும் முறையாகும் . லேசர் சிகிச்சையில் கண்ணின் கார்னியாவின் வடிவன் நிரந்தரமாக மாற்றப்படுகிறது. இந்த சிகிச்சையில், கிட்டபார்வை, தூரப்பார்வை , பார்வை மங்கல் போன்றவை திருத்தப்பயன்படுகிறது. இந்த சிகிச்சைக்குப் பின் கண்ணாடி அல்லது காண்டாக்ட் லென்ஸ் அணிய அவசியம் இருக்காது.

லேசிக் (அ) லாசிக் (LASIK):இது ஒரு பொதுவான கண் சிகிச்சை முறையாகும். இச்சிகிச்சைக்கு 30 நிமிடங்களுக்கு குறைவான நேரமே தேவைப்படும். இந்த சிகிச்சையில் வலி ஏதும் இருக்காது. பார்வையில் உடனடி மாற்றங்கள் தெரிந்துவிடும். Bajaj Freedom 125 CNG Bike Bookings Open: உலகின் முதல் சிஎன்ஜி பைக்.. வாங்கிய முதல் கஸ்டமர்..!

சிகிச்சை முறை: உணர்ச்சி நீக்கும் கண் சொட்டு மருந்து மட்டும் கண்ணில் ஊற்றிவிட்டு, கண்ணின் 20% காரினியாவை சிறிய பிளேட் மூலம் ஒரு பக்கமாக வெட்டி பிரித்து விட்டு பின் லேசர் செலுத்தி கார்னியாவை சரியான அளவில் திருத்தி பிரித்த மேலடுக்கு கார்னியாவை மீண்டும் பழைய நிலைக்கு வைத்துவிடுவார்கள். பின் சில நிமிடங்களில் கார்னியா தானாகவே கண்ணுடன் ஒட்டிக்கொள்ளும். தையல் போட தேவையில்லை.

Photorefractive keratectomy (PRK): இரண்டாவது பொதுவான சிகிச்சையாக இந்த சிகிச்சை இருக்கிறது. இது ஒழுங்கற்ற முறையில் இருக்கும் கார்னியாவை சரி செய்யும் லேசர் சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சைக்கு 10 முதல் 15 நிமிடங்களே ஆகும். இது பார்வை தெளிவு பெற சில நாட்கள் ஆகும்.

சிகிச்சை முறை: இதில் மேலடுக்கில் உள்ள கார்னியாவை லேசர், பிளேடு அல்லது கண் மருந்து ஊற்றி அகற்றிவிடுவர். பின் லேசர் செலுத்தி ஒழுங்கற்ற முறையில் இருக்கும் கார்னியாவை அதிகப்படுத்தியோ, குறைத்தோ சரியான வடிவத்திற்கு கொண்டு வருவார்கள். கார்னியா சரியாவதற்கு காண்டாக்ட் லேன்ஸ் 4 நாட்களுக்கு பொருத்திவிடுவர்.

LASEK - லேசெக் (லேசர் எபிடெலியல் கெரடோமிலியூசிஸ்): இந்த சிகிச்சை முறை லேசிக் மற்றும் பிஆர்கே போன்றது. மேலடுக்கு கார்னியாவை பிளேடு மூலம் வெட்டி ஒரு பக்கமாக பிரித்து லேசர் செலுத்தி திருத்தம் செய்துவிட்டு பின் மேலடுக்கு கார்னியாவை மூடிவிடுவர். இதற்கும் பிஆர்கே போல் காண்டாக்ட் லென்ஸ் பொருத்தப்படும். தொடங்கியது ஆடி மாதம்.. சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகும் கலக்கல் மீம்ஸ்.! கூழ் முதல் குமுறல் வரை..!

epi-LASIK: இந்த சிகிச்சை வறட்சியான கண்களை உடையவர்களுக்கும், மிகச்சிறிய கார்னியல் திசுக்களைக் கொண்டவர்களுக்கும், மற்றும் அதிக கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. இதில் கார்னியாவில் மிக சிறிய அளவில் மேலடுக்கை நீக்கி விடுவர். பின் அதில் லேசரை செலுத்தி கார்னியாவை சரிசெய்து காண்டாக்ட் லென்ஸ் பொருத்தி விடுவர். 4 முதல் 5 நாட்களுக்கு பின் அந்த லென்ஸை நீக்கிவிடுவர்.

லேசர் சிகிச்சையில் 90% அதிகமாக பார்வையை சரி செய்கிறது. கண் மருத்துவரின் ஆலோசனையின் படியும், சிகிச்சை முறை பற்றியும் அறிந்து கொண்டு சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.