ஏப்ரல் 08, சென்னை (Health Tips): கோடைகாலம் தொடங்கிவிட்டாலே மாணவர்களுக்கு விடுமுறை தேதி அறிவிப்பு, அவர்களுடன் இன்ப சுற்றுலா என பட்டியல் நீண்டுவிடும். அதேபோல, வாலறுந்த குறும்புக்கார சிறார்களை கவனிப்பதற்குள் பெற்றோருக்கு எப்போது பள்ளிகளை திறப்பார்கள் என்ற பரிதவிப்பும் ஏற்பட்டுவிடும். ஒருசில சிறார்களின் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு, அவர்களின் எதிர்காலத்துக்கான படிகளை சிறுசிறு பயிற்சியாகவும் வழங்குவார்கள். Madras Eye: வேகமெடுக்குது மெட்ராஸ் ஐ.. சென்னைவாசிகளே உஷார்.!
நீச்சல் பயிற்சி:
அந்த வகையில், கோடையில் கிராமப்புறங்களை தவிர்த்து நகர்ப்புறங்களில் இருக்கும் சிறார்களின் பெற்றோர், தங்களின் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கும் பயிற்சியை வழங்குவார்கள். கிராமத்தில் டின் கட்டி கிணற்றுக்குள் இறக்கி குழந்தைகளின் ஐயோ., அம்மா கதறலுடன் நீச்சல் பயிற்சி கொடுக்கப்படும். நகரங்களில் இருக்கும் பெற்றோர் நீச்சல் குளத்துக்கு அழைத்துச் சென்று பயிற்சி வழங்குவார்கள். இது உடல் சூடு குறைக்கவும் உதவி செய்யும்.
மருத்துவர்கள் எச்சரிக்கை:
ஆனால், நீச்சல் குளங்களில் மணிக்கணக்கில் நீந்தினால் கண்கள் சார்ந்த தொற்றுகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆகையால், 1 மணிநேரம் முதல் 2 மணிநேரம் வரை பயிற்சி எடுத்து பின் வந்துவிடுவது நல்லது. ஒரே நாளில் அதிக நேரம் நீச்சல்குளத்தின் நீரில் செலவிடுவது கண்கள் சார்ந்த தொற்றுக்கு வழிவகை செய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.