ஜூன் 27, புனே (Pune News): இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது வீடியோவை பிரபலமாக்க ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த முறைகளை கையில் எடுக்கின்றனர். இதில் ஒரு சில விஷயங்கள் பார்ப்போர் முகம் சுளிக்கும் வகையிலும், சர்ச்சைக்குரிய வகையிலும் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் சமீபத்தில் ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அதில் இளம்பெண் ஒருவர் சிறுநீர் (Urine Eye Wash) மூலமாக தனது கண்களை சுத்தம் செய்யலாம் என்றும், இதனால் கண்களில் ஏற்படும் எரிச்சல், நீரின்றி வறட்சி ஏற்படுதல், சிவப்பு நிறமடைதல் போன்றவற்றை தவிர்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறுநீரில் கண்ணை சுத்தம் செய்த பெண்மணி :
புனேவைச் சேர்ந்த நூபுர் பிட்டி என்ற பெண்மணி வீடியோவை (Urine Eye Wash Tutorial) வெளியிட்டு இதனை பலரும் செய்து பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். சுகாதாரப் பயிற்சியாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் அவர் இந்த வீடியோ வெளியிட்டுள்ளது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் தங்களது கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் இவ்வாறான விஷயத்தை மேற்கொள்வது மிகப்பெரிய பக்கவிளைவுகளை உண்டாக்கும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 'ஜெய் ஸ்ரீராம்' சொல்லச் சொல்லி கொடூரம்.. இஸ்லாமிய ஆட்டோ ஓட்டுனரிடம் போதை கும்பல் அடாவடி.!
மருத்துவர்களின் எச்சரிக்கை :
இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், "பெண்மணி மேற்கொண்டுள்ள செயல் தூய்மையற்றது. சிறுநீர் தூய்மை செய்யும் பொருள் கிடையாது. இதனை யாரேனும் மேற்கொண்டால் கட்டாயம் கண்கள் சார்ந்த பிரச்சனை ஏற்படும். பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும். ஆகையால் கவனமாக இருக்க வேண்டும். இது போன்ற விஷயங்களை யாரும் உபயோகித்து பார்க்க வேண்டாம்" என கூறுகின்றனர்.
சிறுநீரில் கண்ணை கழுவிய பெண்மணியின் வீடியோ (5 Steps Urine Eye Wash Tutorial):
Please don't put your urine inside your eyes. Urine is not sterile.
Boomer aunties trying to be cool on Instagram is depressing...and terrifying.
Source: https://t.co/SQ5cmpSOfY pic.twitter.com/qgryL9YHfI
— TheLiverDoc (@theliverdr) June 25, 2025