TN Organ Donation: உடல் உறுப்புக்காக காத்திருக்கும் பலர்.. உடல் உறுப்பு தானம் கட்டாயம்..!
தன்னுடைய உடலில் இரண்டாக இருக்கக்கூடிய உறுப்பில் ஒன்றையோ, அல்லது உறுப்பின் ஒரு பகுதியையே கொடுத்து மரணத்தின் பிடியில் சிக்கியிருக்கும் மற்றொரு மனிதனுக்கு மறுவாழ்வு அளிப்பதே உடல் உறுப்பு தானம் ஆகும்.
ஆகஸ்ட் 29, சென்னை (Chennai): உறுப்பு தானம் (Organ Donation) செய்வோரின் இறுதிச்சடங்குகளில் அரசு மரியாதை அளிக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்து அது நடைமுறையில் உள்ளது. உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில் அம்முடிவு எடுக்கப்பட்டது.
உடல் உறுப்பு தான தினம்: கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி புஷ்பாஞ்சலி, அசோகன் என்ற மருத்துவத் தம்பதியினர் இவர்களது இளம் வயது மகன் ஹிதயேந்திரன் மூளைச்சாவு அடைந்ததைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கி தமிழ்நாட்டில் முதல் உறுப்பு தானத்தை துவங்கி வைத்தனர். அன்று முதல் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி மாநில உடல் உறுப்பு தானம் செய்யும் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. Curd For Hair: கூந்தல் அடர்த்தியாக வேண்டுமா? அப்போ தயிரை ஹேர் மாஸ்க்காக பயன்படுத்துங்க..!
உடல் உறுப்பு தானம்: உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. தொடர்ச்சியாக உடல் உறுப்புகள் தானம் பெறுவதில் மத்திய அரசின் பாராட்டுகளையும் விருதையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பெற்று வருகிறது. கடந்த 15 ஆண்டுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 800க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியுள்ளனர். இந்த ஆண்டில் தற்போது வரை 600க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியுள்ளனர். ஆனால் உடல் உறுப்பு தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
குறிப்பாக 6 ஆயிரத்துக்கு மேற்பட்டோர், சிறுநீரகம் பெற முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். 750க்கும் மேற்பட்டோருக்கு இதயம், 600 பேருக்கு கல்லீரல் தேவை இருக்கிறது. ஒருவர் தமது உடல் உறுப்புகளை தானமாக வழங்கினால் 20 பேரின் உயிர் காப்பாற்றபடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதன்தொடர்ச்சியாக உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு செய்யப்பட இருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது என்று உடல் உறுப்பு தானம் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.