Hair Growth (Photo Credit: @heavenlymariam X)

ஆகஸ்ட் 27, சென்னை (Health TIps): முடிகளில் உள்ள ஈரப்பதம் குறைகையில்தான் முடி உதிர்வு, முடி உடைவது ஏற்படுகிறது. இவைகளுக்கு தயிர் ஒரு நல்ல தீர்வாகிறது. தயிர் (Curd) முடியின் வேர்களுக்கு ஈரப்பதத்தை அளித்து வலுவாக்குகிறது. மேலும் இளநரை வராமல் முடிகளுக்கு ஊட்டமளித்து கருப்பாக்கி மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது. மேலும் மாசு மற்றும் சூரிய கதிரால் ஏற்படும் சேதத்திலிருந்தும் பாதுகாக்கிறது. Pudhumai Penn Scheme: பெண் கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் புதுமைப் பெண் திட்டம்.. விபரம் உள்ளே..!

பயன்படுத்தும் முறை: தயிரை பயன்படுத்துவதற்கு முன் தலைமுடியை சுத்தம் செய்து உலர வைக்க வேண்டும். அதன் பின் முடியை இரண்டாக பிரித்து சிறு சிறு பிரிவுகளாக பிரித்து கைகளால் முடியின் வேரில் தயிரை தடவ வேண்டும். முடியில் தயிர் சிறிது உலர்ந்ததும் சாதாரண நீரில் மெதுவாக கழுவ வேண்டும் மறுநாள் தலைக்கு குளித்து விடுங்கள். அதிக நேரம் இருக்க வேண்டாம். வாரம் ஒரு முறை இதை செய்து வரலாம். இவ்வாறு தயிர் பயன்படுத்துவது தலைமுடியை வலுவாகவும், மென்மையாகவும் மாற்றுவதுடன் (Hair Growth) பல்வேறு முடி சார்ந்த பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.