Antibiotics Tablets: ஆன்டிபயாடிக் மாத்திரை அடிக்கடி சாப்பிடலாமா?.. அதனால் வரும் பாதிப்புகள் பற்றி தெரியுமா?.!

ஆன்டிபயாடிக் மாத்திரைகளை அதிகமாக எடுத்து கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இத்தொகுப்பு விளக்குகிறது.

Antibiotics (Photo Credit: @Loveles39426319 X)

ஜனவரி 16, புதுடெல்லி (New Delhi): சென்டர்ஸ் பார் டிசிஸ் கன்ட்ரோல் அண்ட் பிரிவென்ஷன் சொல்லும் தகவல்களின்படி, சளி, இருமல் என மருத்துவர் பரிந்துரை இல்லாமல் அடிக்கடி ஆன்டிபயாடிக் மாத்திரைகள் உட்கொண்ட 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளதாக தெரிகிறது. அடிக்கடி ஆன்டிபயாட்டிக் மாத்திரையை எடுத்துக் கொண்டால் கெட்ட பாக்டீரியாக்களுடன் சேர்ந்து நல்ல பாக்டீரியாக்களும் அழிந்து விடும். Viral Video: காரினை இடித்துச் செல்லும் ரயில்... பதை பதைக்கும் காட்சிகள்...  வைரலாகும் வீடியோ..!

அடிக்கடி ஆன்டிபயாடிக் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால், மற்ற நோய்களுக்கு உட்கொள்ளும் மாத்திரைகளின் ஆற்றல் நீர்த்து போகும். உடலுக்குள் செல்லும் இரு மாத்திரைகளும் கலப்பு செய்துவிடும். இதனால் நம் உடலில் பக்க விளைவுகளை உண்டாக்கும்.

காய்ச்சல், டைஃபாய்டு, நுரையீரல் தொற்று போன்ற நோய்களுக்கு நீங்கள் மருந்து (ஆன்டிபயாடிக் மாத்திரை] எடுத்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் மறுபடியும் அதே நோய்க்கு அந்த மாத்திரையை பயன்படுத்தும்போது அந்த வீரியம் இருக்காது. ஏனெனில் அந்த பாக்டீரியா தன் வடிவமைப்பை மாறியிருக்கும். அதனால் மருந்து வேலை செய்யாது. மேலும் அடிக்கடி ஆன்டிபயாடிக் மாத்திரை உட்கொண்டால் நல்ல பாக்டீரியாக்களும் அழிந்து போகும். இதனால் பூஞ்சை தொற்று நம்மை எளிதில் தாக்கலாம்.