ஜனவரி 16, உத்தரப்பிரதேசம் (Uttar Pradesh): பொதுவாக ரயில் தண்டவாளத்தில் செல்லும் பொழுது, அதன் இரு பக்கங்களில் இருக்கக்கூடிய பாதைகளில் செல்லும் வாகனங்கள் சிறு மீட்டர் தொலைவிலேயே நிறுத்தி வைக்கப்படும். ரயில் சென்ற பிறகு வாகனங்கள் தண்டவாளத்தை தாண்டுவதற்கு அனுமதி வழங்கப்படும். இதனை கண்காணிப்பதற்காக அந்த குறிப்பிட்ட சாலைகளில் இருவர் எப்போதும் இருப்பர். இந்நிலையில் ரயில் தண்டவாளத்தில் ஒருவரின் வாகனம் சிக்கியுள்ளது. அச்சமயம் திடீரென ரயில் வந்துள்ளது. எனவே ரயில் காரினை இடித்தவாறு அங்கிருந்து சென்றுள்ளது. தற்போது இந்த வீடியோவானது இணையதளம் முழுவதும் வைரலாகி வருகிறது. Vetrimaaran Opens Up: அன்னபூரணி படத்திற்கு தடை.. கொந்தளித்த வெற்றிமாறன்..!

ஆனால் இச்சம்பவம் ஆனது எங்கு நடந்தது என்று தெரியவில்லை. இருப்பினும் அந்தக் காரின் நம்பர் பிளேட் மூலம் அந்த கார் உத்தரப்பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டது என்று தெரிகிறது. மேலும் இச்சம்பவத்தினால் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் அந்த காருக்கும் எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை.