World Food Safety Day 2024: "தரமான உணவு.. ஆரோக்கியமான வாழ்வு.." உலக உணவு பாதுகாப்பு தினம்..!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7ஆம் தேதி உலக உணவு பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

World Food Safety Day (Photo Credit LatestLY)

ஜூன் 07, புதுடெல்லி (New Delhi): உணவுப் பாதுகாப்பின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், உணவு மூலம் பரவும் நோய்களைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றில் ஈடுபட மக்களை ஊக்கவிக்கவும் உலக உணவு பாதுகாப்பு தினம் (World Food Safety Day) ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

வரலாறு: உலக சுகாதார அமைப்பு (WHO), உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) இணைந்து இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்க தீர்மானித்து முன்னெடுத்தது. அதன்பேரில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்நாளை அறிவித்தது. தொடர்ந்து 2019 ஜுன் 7-ல் இத்தினம் முதன்முறை கடைபிடிக்கப்பட்டது. Instagram Influencer Arrested: படிக்காதவன் விவேக் ஸ்டைலில் ரீல்ஸ் செய்து வந்தவருக்கு.. காவல்துறையினர் வைத்த ஆப்பு..!

உணவு பாதுகாப்பு: அறிவியல் முன்னேற முன்னேற முதலில் பாதிக்கப்பட்டது உணவு வகைகள்தான். நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக உணவு வகைகளில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் நம் உடல் நிலையைப் பாதித்து பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது. நம்மில் பலரும் உணவை டப்பர் வேர் தொடங்கி பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்துவைத்துதான் சாப்பிடுகிறோம். இதனால் பல நோய் அபாயங்கள் ஏற்படுகின்றன. தரமற்ற உணவு பொருட்களால் 200 வகையான நோய்கள் உருவாகுவதாக கூறப்படுகிறது. இதனால் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். ஆனால் உணவுப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமாக ஆரோக்கியமான வாழ்க்கை நோக்கி செல்ல முடியும்.